ARTICLE AD BOX
இந்தியாவில் முக்கியமான நகரமாக மும்பை, சென்னைக்கு அடுத்து பெங்களூரு உள்ளது. இங்கு ஐடி நிறுவனங்கள் தொடங்கி பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் வேலைவாய்ப்பும் அதிகளவில் உள்ளது. பரபரப்பான நகரமான பெங்களூரில் கல்வி கட்டணங்கள் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருவதால், பெற்றோர்களின் கவலை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 முதல் 15 சதவிகிதம் வரையிலான வருடாந்திர பள்ளிக் கட்டண உயர்வால் நடுத்தர குடும்பங்கள் போராடுகின்றன. சில பள்ளிகள் ஏறக்குறைய 30 சதவிகிதம் கட்டண உயர்வை அமைப்படுத்துகின்றன. கல்விக் கட்டணங்களின் இந்த உயர்வு குறிப்பிடத்தக்க நிதிச் சுமையை உருவாக்குகிறது.
மேலும் படிக்க - அம்பேத்கர் & பகத்சிங் புகைப்படம்! ஆம் ஆத்மி vs பாஜக இடையே கடும் வாரத்தை போர்
குறிப்பாக 2 குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் கடும் நிதி சிக்கலுக்கு ஆளாகி உள்ளனர். கல்வி கட்டண உயர்வால் வீட்டில் உள்ள மற்ற வரவு செலவுத் திட்டம் மற்றும் இதர செலவுகளை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளின் இந்த கட்டண உயர்வால் பல பெற்றோர்கள் தங்களது விரக்தியை வெளிப்படுத்தி உள்ளனர். கடந்த ஆண்டு ரூ. 42,000 முதல் ரூ. 44,000 ஆக இருந்த கட்டணம், இந்த முறை ரூ. 68,000 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர பாடப்புத்தகங்கள், போக்குவரத்து மற்றும் சீருடைகளின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த உயர்வு ஒவ்வொரு குடும்பங்களிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இத்தகைய நிதி நெருக்கடிகள், இந்த கல்வி கட்டணக் கட்டமைப்புகளின் நிலைத்தன்மை மற்றும் கல்வியின் ஒட்டுமொத்தத் தரத்தில் அவற்றின் தாக்கம் ஆகியவற்றைக் கேள்வி கேட்க பலரைத் தூண்டுகிறது. இந்நிலையில் வாய்ஸ் ஆஃப் பேரன்ட்ஸ் என்ற அசோசியேஷனின் பொதுச்செயலாளரான சித்தானந்த், இந்த கட்டண உயர்வுகளின் ஏற்றத்தாழ்வு தன்மை குறித்து தனது கவலைகளை தெரிவித்தார். பள்ளிக் கட்டணம் உயர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பெற்றோர்களின் வருடாந்திர வருமானம் 2-3 சதவீதம் மட்டுமே உயருகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வு குடும்பங்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் பிரதிநிதி டி.சசிகுமார், பள்ளி கட்டண உயர்வை ஆதரித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் ஒன்றும் செய்ய முடியாது என்று ஒப்புக்கொள்கிறார், பள்ளிகள் தரமான கல்வித் தரத்தை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். இருப்பினும், பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்யும் அதே வேளையில், அதிகரித்து வரும் இந்த செலவுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்று சிரமப்படுகின்றனர். 30 முதல் 40 சதவீதத்தை தாண்டி கட்டணங்கள் உயர்ந்தால் முன்பே பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மறுபுறம் தனியார் பள்ளி கட்டணங்களை அரசு ஒழுங்குபடுத்த முடியாது என்றும், அதிக கட்டணத்தை தவிர்க்க அரசு பள்ளியில் பிள்ளைகளை சேருங்கள் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | தேர்வு எழுத பாராசூட்டில் சென்ற கல்லூரி மாணவன்!! வைரலாகும் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ