வாரந்தோறும் ஏராளமான படங்கள் திரைக்கு வரும் நிலையில், இந்த வாரம் என்னென்ன படங்கள் திரைக்கு வர இருக்கின்றன என்று பார்க்கலாம். பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கி இதுவரையில் 25-க்கும் அதிகமான படங்கள் திரைக்கு வந்த நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி நச்சுனு 2 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக உள்ளன.

இந்த வாரம், அதாவது பிப்ரவரி 21-ஆம் தேதி ரிலீஸ் ஆன படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் என்றால் அது தனுஷ் இயக்கத்தில், 3-ஆவது படமாக வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான 'டிராகன்' திரைப்படமும் தான்.

Neek நாளே நாளில் பல திரையரங்குகளில் காத்து வாங்கி வரும் நிலையில், டிராகன் 4 நாளில் 50 கோடியை எட்டி உள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால் பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த படம் 200 கோடி வசூலை பெற்று தருமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது, அடுத்த வாரம் திரையரங்கில் வெளியாகும் படங்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அகத்தியா:

அதன்படி பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள படம் அகத்தியா. அர்ஜுன், யோகி பாபு ஆகியோர் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படம் ஜீவாவிற்கு திருப்பு முனையை
ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் வரும் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சப்தம்:

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், ஆதி, லட்சுமி மேனன்,ரெடின் கிங்ஸ்லி, சிம்ரன், லைலா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாயுள்ள படம் தான் சப்தம். ஈரம், வல்லினம் போன்ற படங்களை இயக்கியவர் என்பதால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். த்ரில்லர் ஜானரில் உருவான இந்தப் படம் வரும் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சுழல் சீசன் 2 (ஓடிடி)

திரைக்கு வருவது போன்றும் இந்த வாரம் ஒரு சில படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. வரும் 28ஆம் தேதி சுழல் சீசன் 2 வெளியாக இருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோவில் இந்த வெப் சீரிஸ் வெளியாகிறது. பிரம்மா இயக்கத்தில் உருவான இந்த வெப் சீரிஸில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், கௌரி கிஷான், லால் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்த வெப் சீரிஸ்க்கு இசையமைத்துள்ளார்.