270 கிலோ எடை - தவறி விழுந்து கழுத்து உடைந்த 17 வயது பளுதூக்கும் வீராங்கனை உயிரிழப்பு

4 days ago
ARTICLE AD BOX

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சாரியா(17), தேசிய அளவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று இருக்கிறார். இவர் அங்குள்ள பிகானர் என்ற இடத்தில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அவர் பெல்பால் எனப்படும் பளுதூக்கும் வட்டுக்களை தூக்கி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார். அவர் சிறிது சிறிதாக எடையை அதிகரித்துக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் 270 கிலோ எடையை தூக்க முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தூக்கிய பளுவட்டுக்கள் கைதவறி அவரது கழுத்தில் விழுந்தது. இதனால் ஆச்சாரியா அப்படியே சரிந்து விழுந்தார். அருகில் நின்ற சக தடகள வீரர்கள் உடனே ஆச்சாரியாவை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 270 கிலோ எடை பளு அவரது கழுத்தில் விழுந்ததில் கழுத்து உடைந்து இந்த அகால மரணம் நிகழ்ந்துள்ளது. ஆச்சாரியாவின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதுவும் மைனர் பெண்ணான ஆச்சாரியா அளவுக்கு அதிகமான எடை கற்களை தூக்க முயன்றபோது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் நடந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. இச்சம்பவம் குறித்து ஆச்சாரியாவின் பெற்றோர் போலீஸில் புகார் செய்யவில்லை. ஆனாலும் உடற்பயிற்சி மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை எடுத்துச்சென்று போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் நடந்தபோது அவரது பெற்றோர் திருமணம் ஒன்றுக்கு சென்று இருந்தனர். பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஆச்சாரியாவை விட்டுசென்று இருந்தனர். கடந்த ஆண்டுதான் ஆச்சாரியா பளு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். அதற்குள் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Read Entire Article