27 ஆண்டுகளின் பின் உருவாகும் சனி நட்சத்திரபெயர்ச்சி: அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை?

1 day ago
ARTICLE AD BOX

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகப்பெயர்ச்சி மிகவும் முக்கியம் பெறுகின்றது. ஒரு குறிப்பிட்ட காலத்தை கடந்தவுடன் இந்த கிரக பெயர்ச்சிகளும் நடைபெநும் அது ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு வகைப்படும்.

மார்ச் 02, 2025 அன்று, சனி பூரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாவது பாதத்தில் நுழைகிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்குத் திரும்புவது சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கப் போகிறது.

எனவே இந்த நட்சத்திர மாற்றத்தால் எந்த ராசிகளுக்கு நன்மை மட்டும் கிடைக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்வது அவர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கப்போகிறது.

இந்த சனிப்பெயற்சியால் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், மேலும் அவர்கள் அதிகாரத்துடன் பணிகளை முடிக்க முடியும்.

வேலை வாழ்க்கையில், புதிய வாய்ப்புகள் கிடைக்கும், மேலும் அவர்களின் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர மாற்றம் நல்ல பலன்களைத் தரும்.

இதனால் அவர்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படப்போகிறது.

அவர்களின் பேச்சில் மென்மை நிறைந்திருக்கும், தொழில் வாழ்க்கையில் அவர்கள் எதிர்பார்க்காத புகழைப் பெறலாம்.

வேலை வாழ்க்கையைப் பொறுத்தவரை, பதவி உயர்வுகள் மற்றும் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிப்பெயர்ச்சி நடைபெறுவது நல்ல பலன்களை அளிக்கும்.

அவர்கள் பணியிடத்தில் செய்யும் முயற்சிகளுக்குப் பாராட்டப்படுவார்கள்.

சமூகத்தில் அவர்களின் நற்பெயரும், மரியாதையும் அதிகரிக்கும், மேலும் அவர்களின் முயற்சிகள் நேர்மறையான பலன்களைத் தரும்.

அரசியல் மற்றும் அரசுத் துறையுடன் தொடர்புடைய நபர்கள் அதிக லாபம் ஈட்டலாம்.

 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

Read Entire Article