-26 டிகிரி குளிர், பலத்த காற்று வீச்சுகளுக்கிடையே கோல் அடித்த மெஸ்ஸி..! 2025இன் முதல் கோல்!

4 days ago
ARTICLE AD BOX

இன்டர் மியாமி அணிக்காக லியோனல் மெஸ்ஸி இந்தாண்டுக்கான தனது முதல் கோலை அடித்தார்.

கான்காகேஃப் சாம்பியன்ஸ் கப் முதல் சுற்றில் இன்டர் மியாமி அணியும் கான்ஸ்டாஸ் சிட்டி அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடியது.

இந்தப் போட்டியில் 56ஆவது நிமிஷத்தில் லியோனல் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் இன்டர் மியாமி அணி 1-0 என வெற்றி பெற்றது.

இதுதான் மெஸ்ஸியின் 2025ஆம் ஆண்டின் முதல் கோல் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் 851 கோல்கள் அடித்துள்ளார்.

-26 டிகிரி குளிர், பலத்த காற்று வீச்சு

15,178 பேர் கூடியிருந்த இந்தப் போட்டியில் இரு அணியுமே குளிரால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காற்றின் வேகம் 9 மைல்ஸ்/ மணி ஆகவும் வெப்பநிலை -26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்தன.

செர்ஜியோ பஸ்குவல்ஸிடம் இருந்த வந்த பந்தினை லாவகமாக தடுத்து அருகில் இருந்த டிஃபெண்டர்களை தாண்டி அசத்தலாக கோல் அடித்தார் மெஸ்ஸி.

78ஆவது நிமிஷத்தில் எரிக் தாமி கோல் அடிக்க அது ஆப்-சைடு கொடுக்கப்பட்டது.

60 சதவிகித பந்தினை இன்டர் மியாமி அணி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த போட்டி வரும் செவ்வாய்கிழமை விளையாடவிருக்கிறது.

ICE COLD WIN ✨ pic.twitter.com/MRGjiqAnpm

— Inter Miami CF (@InterMiamiCF) February 20, 2025
Read Entire Article