ARTICLE AD BOX
இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவருக்கும் மிக முக்கியமான அறிவுரை ஒன்றை கூறி இருக்கிறார்.
தற்போது இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று இருக்கிறது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து அணிக்கு எதிராக துபாய் சர்வதேச மைதானத்தில் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இறுதி போட்டியில் ரோகித் சர்மா எப்படி விளையாட வேண்டும்? என்பது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.
இது இரண்டு வருட பழக்கம்
ரோகித் சர்மா பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி ரன்கள் கொண்டு வருவதை தன்னுடைய சமீப பேட்டிங் அணுகுமுறையாக கொண்டிருக்கிறார். சில நேரங்களில் அது வெற்றியை கொடுத்தாலும் சில நேரங்களில் அணிக்கு அது பெரிய டென்ஷனை உருவாக்கி விடுகிறது. சாம்பியன்ஸ் டிராபி செமி பைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சூழ்நிலை உணராது ரோகித் சர்மா விளையாடியது அணிக்கு பின்னடைவை கொண்டு வந்தது.
இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “கடந்த இரண்டு வருடங்களாக ரோகித் சர்மா இப்படியான அணுகுமுறையைத்தான் கடைபிடித்து வருகிறார். இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இருந்து அவர் இந்த திட்டத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறார். அவர் இந்த பாணியில் விளையாடி சில வெற்றிகளை பெற்றிருக்கிறார். ஆனால் அவருடைய திறமைக்கு தகுந்த வெற்றிகளை அவர் பெறவில்லை”
முதலில் செய்ய வேண்டிய மாற்றம்
“நான் அழகியல் கண்ணோட்டத்தில் அல்லது கூட்டத்தினரை மகிழ்விக்கும் நோக்கத்தில் பேசவில்லை. அவர் ஒரு 25 ஓவர்கள் பேட்டிங் செய்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம், அப்பொழுது இந்திய அணி 180 முதல் 200 ரன்கள் வரை எடுத்து இரண்டு விக்கெட்டை மட்டும் இழந்து இருந்தால் எப்படி இருக்கும்? என்று மேற்கொண்டு கற்பனை செய்து பாருங்கள்”
இதையும் படிங்க : ஐசிசி ரூல்ஸ மாத்துங்க.. ஷமிக்கு குவியும் ஆதரவு.. பவுலர்கள் களத்தில் குதிப்பு.. மாற்றம் வருமா?
“இப்படி ஒரு மேட்ச் வின்னராக தாக்கம் செலுத்தக்கூடிய ரோஹித் சர்மா வெறும் 25 ரன் அதிரடியாக எடுத்துவிட்டு வெளியேறுவதில் மகிழ்ச்சி அடைகிறாரா? இதனால் அவருக்கு நான் என்ன சொல்கிறேன் என்றால் 7, 8 ஓவர்கள் விளையாடுவதற்கு பதிலாக 20, 25 ஓவர்கள் விளையாட முயற்சி செய்யுங்கள் என்று சொல்கிறேன். நீங்கள் இப்படி செய்யும் பொழுது அணிக்கு நீங்கள் தரும் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.
The post 25 ரன்னா 25 ஓவரா?.. ரோகித் கிட்ட கம்பீர் இத சொல்லணும்.. எல்லாம் மாறனும் – சுனில் கவாஸ்கர் அறிவுரை appeared first on SwagsportsTamil.