24 வயதில் 83 லட்சம் சேமித்த இங்கிலாந்து பெண்.. 40 வயதில் 11 கோடியில் ஆரம்பர வீடு.. சபாஷ் திட்டம்

4 days ago
ARTICLE AD BOX

24 வயதில் 83 லட்சம் சேமித்த இங்கிலாந்து பெண்.. 40 வயதில் 11 கோடியில் ஆரம்பர வீடு.. சபாஷ் திட்டம்

London
oi-Velmurugan P
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பணம் சேமிப்பது சவாலானதாக மாறிவிட்டது. ஆனால் இன்றைக்கும் சிலர் குறைந்த சம்பளம் வாங்கினாலும், சிக்கனமாக வாழ்ந்து, நன்றாக பணத்தை சேமிப்பதுடன், சொந்தமாக வீடு, கார், நிலம், ஓய்வுகால நிதி, வசதியான வாழ்க்கை என சகலவசதிகளுடன் வசதிகளுடன் வாழ்கிறார்கள். அப்படித்தான் இங்கிலாந்து நாட்டின் லண்டனைச் சேர்ந்த பெண், 24 வயதில் 83 லட்சம் சம்பாதித்துள்ளார். 40 வயதிற்குள் 11 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கி அனைத்து பொறுப்பிலிருந்தும் விலக விரும்புகிறார்.

இன்றைக்கு சேமிப்பது என்பது பலருக்கும் வராத ஒன்றாக உள்ளது. 100 ரூபாய் இருந்தால் அதை வைத்து எங்கு சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிடலாம்.. 200 ரூபாய் இருந்தால் எந்த குவாட்டர் வாங்கலாம் என்று நினைப்பவர்கள் அதிகரித்து விட்டார்கள். சேமிக்கும் முன்பு வரிசையாக இஎம்ஐயில் பொருட்களை வாங்கி போடுகிறார்கள். திருமணம் ஆன பின்னர், ஸ்மார்ட் டிவி, செல்போன், கட்டில்,மெத்தை, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, பைக், கார் என இஎம்ஐஇல் வாங்க பொருட்களே இல்லை.. இதில் ஏதாவது ஒரு இஎம்ஐ இல்லாதவர்கள் மிகவும் அரிது.

international london money saving

இதேபோல் பணம் கொஞ்சம் கையில் தேங்கினாலே அதனை ஓட்டலில் போய் கொட்டி அழிப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். கடைசி வரை கிரெடிட் கார்டுகளையும், நண்பர்களையும், கடன் வழங்கும் ஆப்களுக்கும் வட்டி கட்டியே வாழ்கிறார்கள் பலர். ஆனால் ஒரு சிலர் மிகவும் வித்தியாசமான வாழ்வார்கள்.. வெறும் 10000 சம்பளம் தான் வாங்குவார்கள்... ஆனால் சொந்தமாக வீடு இருக்கும்.. வங்கியில் நிறைய சேமிப்பு இருக்கும். எனக்கு தெரிந்த வயதான மூதாட்டியும், அவரது கணவரும் இணைந்து சம்பாதித்தது மாதம் 10 ஆயிரம் முதல் 15000 ரூபாய் தான்.. ஆனால் அவர்களின் இறுதி காலத்தில் அவர்களிட இருந்த பணம் எவ்வளவு தெரியுமா? 25 லட்சத்தை தாண்டும்..

நிலம், சொந்த வீடு, தங்க நகைகள் என எல்லாமே நிறைய உள்ளது. அவர்கள் சொன்ன சீக்ரெட் என்னவென்றால், பணத்தை சேமிப்பிற்காக ஒதுக்கிய பின்னர், மீதமுள்ள பணத்தில் தான் வாழ்வோம் என்றார். அதாவது பணத்தை செலவு செய்துவிட்டு மீதுமுள்ள பணத்தை சேமிக்காமல், மாதம் மாதம் இவ்வளவு சேமிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு, மீதமுள்ள பணத்தில் தான் வாழ்ந்தார்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பணம் அவரை கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ வைத்துள்ளது. அதேநேரம் வழக்கமான ஆடம்பர வாழ்க்கை எதுவும் வாழவில்லை.. ஓட்டல் சாப்பாடு, இஎம்ஐயில் பொருட்கள் வாங்கவில்லை.. குறிப்பாக இன்றுவரை அவர் கடனே வாங்கவில்லை. அவரிடம் தான் பலர் கடன் வாங்கி வாழ்ந்து வருகிறார்கள்.

இப்படித்தான் இங்கிலாந்தின் லண்டனில் பெண் ஒருவர் வாழ்கிறார். அதிக செலவு செய்யும் வாய்ப்புள்ள வயது என்றால் அது இளம் வயது தான்.ஆனால் ஒரு இளம் பெண் எதிர்பார்ப்புகளை மீறி மிகப்பெரிய சேமிப்பை கைவசம் வைத்திருக்கிறார். அவரது சிக்கனமான வாழ்க்கை முறையும், நிதி இலக்குகளுக்கான அர்ப்பணிப்பும் பலருக்கும் நிச்சயம் பாடமாக இருக்கும். சம்பாதிப்பதை விட அதை சேமிப்பது மிகவும் சவாலானதாக இருக்கிறது. பலர் கணிசமாக சம்பளம் வாங்கினாலும், பணத்தை சேமிப்பதிலும், நிதி நிர்வாகத்தில் ஒழுக்கத்தையும் கடைபிடிக்க முடியவில்லை.. அதற்கு சரியான உத்தியை கையாள்வது அவசியமாக உள்ளது.

தி சன் பத்திரிகை வெளியிட்ட தகவலின் படி, 24 வயதான மியா மெக்ராத், இப்போதே ரூ. 83 லட்சம் பணத்தை சேமித்துள்ளார். ஃபேஷன் துறையில் கணக்கு மேலாளராகப் பணிபுரியும் மியா பல்வேறு வகையில் சேமிக்கிறார். அவர் ஓட்டலில் சாப்பிடாமல் வீட்டிலேயே உணவு தயாரிக்கிறார். காபி குடிக்க கூட கடையில் செலவு செய்வது இல்லை.. அவரே வீட்டில் காபி போட்டுக் கொண்டிருக்கிறார். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வெளியில் செல்லும் போது எல்லாம் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்கிறார். விலையுயர்ந்த அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆடைகளை வாங்கி குவிக்காமல், மலிவு விலையில் உடைகள் வாங்குவது உள்பட மாற்று வழிகளைத் தேர்வு செய்கிறார்.சிக்கனமான இருக்கிறார் மியா.

வசதியான வாழ்க்கையை தியாகம் செய்வதால், முன்கூட்டியே அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓய்வு பெறும் அளவிற்கு பணத்தை சேமிக்க முடியும் என்று மியா நம்புகிறார். காலையில் முட்டை மற்றும் ரொட்டியுடன் கூடிய மிக சாதாரண உணவை சாப்பிடுகிறார். ஆசைப்பட்டு எந்த ஒரு உணவையும் வாங்கவில்லை..தனியாக வீட்டில் வசிக்காமல் தனது பெற்றோருடன் வாழ்வதால் வாடகை செலவையும் குறைத்துள்ளார். அலங்காரம் செய்வது மற்றும் ஆடம்பர பொருட்களை வாங்குவது என்பதை அடியோடு தவிர்க்கிறார். 40 வயதிற்குள் ரூ. 11 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கும் அளவிற்கு சேமிப்பதே தனது இலக்கு என்று கூறும் அவர், அத்துடன் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓய்வு பெற்று பின்னர் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நிர்ணயித்துள்ளார்.

More From
Prev
Next
English summary
A woman from London, England, earned 83 lakhs at the age of 24. By the age of 40, she bought a house worth 11 crores.
Read Entire Article