ARTICLE AD BOX
நடிகர் மற்றும் இயக்குனர் சேரன் நடித்த, இயக்கிய ’ஆட்டோகிராப்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், இந்த படம் மீண்டும் திரையரங்கில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இதற்காக ஒரு ஏஐ வீடியோ உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், 21 ஆண்டுகளுக்கு முன்பான சேரன் அப்படியே அச்சு அசலாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
சேரன் மற்றும் சினேகா முக்கிய வேடங்களில் நடித்த ’ஆட்டோகிராப்’ திரைப்படம், 2004 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தை பார்த்த ஒவ்வொருவரும், "இது தங்களுடைய காதல் கதையை போலவே இருக்கிறது" என்று அந்த காலத்திலேயே பரபரப்பாக பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்திற்காக சிறந்த பின்னணி பாடகி விருதை சித்ரா, சிறந்த பாடலாசிரியர் விருதை பா. விஜய் ஆகிய இருவரும் பெற்றனர்.
இந்த நிலையில், 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த படம் திரையரங்கில் வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோ ஒன்றை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சேரன், சினேகா உள்பட அந்த படத்தில் நடித்தவர்கள் இளமையான தோற்றத்தில் இருப்பதை பார்த்து, ரசிகர்கள் ஏஐ தொழில்நுட்பத்தினை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Very happy to unveil the Trailer of @CheranDirector's #Autograph ❤️❤️
My lovely wishes to you sir and the entire team for the Re-release 🤗@actress_Sneha #Gobika #Mallika #Kaniga #Rajesh @dop_ravivarman @vijaymilton #DwaRaghanath #SangiMahendra #Bharadhwaj #SabeshMurali… pic.twitter.com/ccHoW1Bhsc