ARTICLE AD BOX
விண்வெளியிலிருந்து மிகப்பெரிய விண்கல் ஒன்று வந்துகொண்டுள்ளதாகவும் இது பூமியில் மோதி பாதிப்புகளை ஏற்படுத்த 1.5% வாய்ப்புகள் உள்ளதாகவும் அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது.
2024 YR4 என்ற அந்த விண்கல்லை தெற்கு கலிஃபோர்னியாவிலிருந்து நாசா விஞ்ஞானிகள் கண்காணித்து
வருகின்றனர். அந்த விண் கல் பூமியின் மோத 3.2% வாய்ப்புகள் உள்ளதாக சில நாட்களுக்கு முன் கூறப்பட்டிருந்தது. இதற்கு முன்னும் விண்கல் விழும் அறிவிப்புகளை நாசா வெளியிட்டிருந்தாலும் தற்போது மோதல் நிகழ மிக அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் 3.2% வாய்ப்பு என அறிவித்ததை தற்போது 1.5% வாய்ப்பு என குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 YR4 விண்கல் இதே வேகத்தில் இதே பாதையில் வந்தால் பூமியின் மீது 2032ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி மோதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.