“2026-ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியமைக்கும்!” - ராமதாஸ் சிறப்பு நேர்காணல்

1 day ago
ARTICLE AD BOX

Published : 23 Mar 2025 10:44 AM
Last Updated : 23 Mar 2025 10:44 AM

“2026-ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியமைக்கும்!” - ராமதாஸ் சிறப்பு நேர்காணல்

<?php // } ?>

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்.’ என்ற குறள் வழியில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஆட்சியின் குறைகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டுபவர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். வியாழன் தவறாமல் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து நாட்டு நடப்பை அலசும் மருத்துவர் ராமதாஸ், ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த பிரத்யேக நேர்காணல் இது.

ஒரு காலத்​தில் வெற்​றிக் கூட்ட​ணி​யிலேயே பயணித்த பாமக-வுக்கு அண்​மைத் தேர்​தல்​களில் அது கைகூ​டா​மல் போனது ஏன்?

பாட்​டாளி மக்​கள் கட்சி இப்​போதும் வலிமை​யாகத் தான் இருக்​கிறது. இன்​னும் கேட்​டால், பாட்​டாளி மக்​கள் கட்​சி​யின் வலிமை அண்​மைக் காலங்​களில் அதி​கரித்​திருக்​கிறது. அண்​மை​யில் உழவர் பேரியக்​கத்​தின் மாநாட்டை திரு​வண்​ணா​மலை​யில் நடத்​தினோம். வெறும் 25 நாட்​களில் ஏற்​பாடு செய்​யப்​பட்ட அந்த மாநாட்​டில் 3 லட்​சத்​திற்​கும் அதி​க​மானோர் திரண்​டனர். அடுத்து பிப்​ர​வரி 23-ம் தேதி கும்​பகோணத்​தில் சோழ மண்டல சமய, சமு​தாய நல்​லிணக்க மாநாட்டை சிறப்பாக நடத்தினோம்.

மே 11-ம் நாள் சித்​திரை முழுநிலவு நாள் இளைஞர் பெரு​விழா​ நடை​பெறவுள்​ளது. அப்​போது பாட்​டாளி மக்​கள் கட்​சி​யின் முழு​மை​யான வலிமை தெரி​யும். தேர்​தல் முடிவு​களுக்கு பல்​வேறு காரணி​கள் உள்​ளன. 2026-ம் ஆண்டு தேர்​தலில் பாட்​டாளி மக்​கள் கட்சி அங்​கம் வகிக்​கும் கூட்​டணி அமோக வெற்றி பெற்று ஆட்​சி​யமைக்​கும். அது தான் உங்​கள் கேள்விக்கு நான் அளிக்​கும் பதிலாக இருக்​கும்.

வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்​கீடு அளித்​தால் திமுக-வுக்​கும் அது சாதகம் தானே... பிறகேன் திமுக அரசு இந்த விஷ​யத்​தில் அக்​கறை காட்​டா​மல் இருக்க வேண்​டும்?

நல்ல கேள்வி தான். இந்து தமிழ் திசை அலு​வல​கத்​தில் இருந்து கூப்​பிடும் தொலை​வில் தான் அறி​வால​யம் அமைந்​திருக்​கிறது. அங்கு தான் இந்​தக் கேள்​வியை நீங்​கள் கேட்​டிருக்க வேண்​டும். குறைந்த பட்​சம் அண்​மை​யில் விழுப்​புரத்​திற்கு முதலமைச்​சர் மு.க.ஸ்​டா​லின் வந்த போதாவது நீங்​கள் இதைக் கேட்​டிருந்​திருக்​கலாம்.

பொது​வாக நடிகர்கள் அரசியலுக்கு வருவதை பாமக அவ்​வள​வாக விரும்​பாது என்​பார்​கள். விஜய்​யின் அரசி​யல் வரு​கையை எப்படி பார்க்​கிறீர்​கள்?

யாரும் அரசி​யலுக்கு வரு​வதை நாங்​கள் எதிர்க்​க​வில்​லை. நடிகர் விஜய் அரசி​யலுக்கு வரு​வதை​யும் நாங்​கள் எதிர்க்​க​வில்​லை. அவர் புதிய கட்சி தொடங்​கிய போது வாழ்த்​துகளைத் தெரி​வித்​தோம். அரசி​யலுக்கு வர அனை​வ​ருக்​கும் உரிமை உண்​டு. அவர்​களின் பணி​களைப் பொறுத்து தான் அவர்​களுக்கு மக்​கள் அங்​கீ​காரம் அளிப்​பார்​கள்.

பிரிந்து கிடக்​கும் அதி​முக ஒன்​றிணைய வேண்​டும் என அக்​கட்​சி​யின் தொண்​டர்​கள் விரும்​பு​கி​றார்​கள். ஆனால், பழனி​சாமி அதை நிராகரிக்​கி​றாரே?

அது அதி​முக-​வின் உள்​கட்சி விவ​காரம். அது குறித்து நான் கருத்து கூறு​வது முறையல்ல.

இந்த விஷ​யத்​தில் ஒரு மூத்த அரசி​யல்​வா​தி​யான நீங்​கள் மத்​தி​யஸ்​தம் செய்து பார்க்​கலாமே?

இந்​தக் கேள்விக்​கான எனது பதில் முந்​தைய வினா​வுக்​கான பதி​லிலேயே இருக்​கிறது.

சீமானின் பெரி​யார் குறித்த விமர்​சனத்தை எப்​படி எடுத்​துக் கொள்​கிறது பாமக?

தந்தை பெரி​யார் எங்​களின் கொள்கை வழி​காட்​டி. அவரை யார் விமர்​சித்​தா​லும் பொறுத்​துக் கொள்ள முடி​யாது. தமிழ்​நாட்​டில் பகுத்​தறிவு வளர​வும், சமூகநீதி செழிக்​க​வும் பாடு​பட்​ட​வர் தந்தை பெரி​யார். தந்தை பெரி​யாரை விமர்​சிப்​பவர்​கள் கூட, ஏதாவது ஒரு வழி​யில் அவரால் பயனடைந்​தவர்​களாகத்​தான் இருப்​பார்​கள்.

துரை​முரு​க​னுக்கு துணை முதல்​வர் பதவி கொடுத்​திருக்க வேண்​டும் என்​கிறீர்​கள். ஆனால் அவரோ, இன்​பநிதி காலத்​தி​லும் எனக்​கோர் இடம் வேண்​டும் என்ற மனநிலை​யில் இருக்​கி​றாரே?

நாங்​கள் கூறு​வது எங்​கள் நிலைப்​பாடு. துரை​முரு​கன் கூறு​வது அவரது நிலைப்​பாடு.

மூத்த அமைச்​சர்​களுக்கு திமுக-​வில் இப்​போது மரி​யாதை இல்லை என்​பதை ஒத்​துக்​கொள்​கிறீர்​களா?

இந்த வினாவுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தான் பதிலளிக்க முடியும். நான் எதையும் கூற முடியாது.

வன்​னியர்​களுக்கு 10.5 உள் இடஒதுக்​கீடு கொடுத்​து​விட்​டால் திமுக கூட்​ட​ணிக்கே வந்​து​விடு​கி​றோம் என்​கி​றாரே அன்​புமணி... அப்​போது திமுக-வுக்கு எதி​ரான உங்​கள் குற்​றச்​சாட்​டு​கள் எல்​லாம் இல்லை என்​றாகி​விடு​மா?

மருத்​து​வர் அன்​புமணி ராம​தாஸ் எந்த இடத்​தி​லும் அவ்​வாறு கூற​வில்​லை. அவர் கூறியதை அரைகுறை​யாக புரிந்து கொண்டு நீங்​கள் வினா எழுப்​பு​கிறீர்​கள். தேர்​தலின் போது மட்​டும் தான் வன்​னியர் இட ஒதுக்​கீடு குறித்து பாமக பேசுவ​தாக திமுக சார்​பில் குற்​றஞ்​சாட்​டப்​பட்​டது.

கடந்த டிசம்​பர் மாதம் காஞ்​சிபுரத்​தில் வன்​னியர் இட ஒதுக்​கீட்டை வலி​யுறுத்தி நடை​பெற்ற போராட்​டத்​தில் இதைக் குறிப்​பிட்டு பேசிய மருத்​து​வர் அன்​புமணி ராமதாஸ், “தேர்​தலின் போது மட்​டும் தான் இட ஒதுக்​கீடு குறித்து பாமக பேசுவ​தாக கூறு​பவர்​கள் முட்​டாள்​கள். எங்​களுக்கு தேர்​தல் முக்​கியமல்ல, இட ஒதுக்​கீடு தான் முக்​கி​யம். வேண்​டு​மா​னால், வன்​னியர்​களுக்கு திமுக 15 சதவீத இட ஒதுக்​கீடு வழங்​கட்​டும். தேர்​தலில் கூட போட்​டி​யி​டா​மல் வில​கிக் கொண்டு திமுக-வை ஆதரிக்​கி​றோம். அதேசம​யம், திமுக இட ஒதுக்​கீடு வழங்​கா​விட்​டால், வீடு வீடாகச் சென்று வன்​னியர்​களுக்கு திமுக இழைத்த அநீ​தியை எடுத்​துக் கூறி திமுக அணியை வீழ்த்​து​வோம்” என்று தான் கூறி​னார்.

2021-ம் ஆண்டு தேர்​தலின் போது கூட, “எங்​களுக்கு ஒரு தொகுதிகூட தேவை​யில்லை என்று வெற்​றுத் தாளில் எழு​தித் தரு​கி​றோம்; அதை வைத்​துக் கொண்டு எங்​களுக்கு இட ஒதுக்​கீடு வழங்​குங்​கள்” என்று தான் அதி​முக-​விடம் கூறினோம். எங்​களுக்கு இட ஒதுக்​கீடு வழங்​கியதற்கு நன்றி கூறும் வகை​யில் நாங்​கள் போட்​டி​யிடும் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 23 ஆகக் குறைத்​துக் கொண்​டோம். தேர்​தல் அரசி​யலை விட சமூகநீதி தான் எங்​களுக்கு முக்​கி​யம் என்​பது தான் அதன் பொருள் ஆகும். எங்​களின் இந்த உணர்​வு​களை புரிந்து கொள்​ளுங்​கள். திமுக மீது நாங்​கள் முன்​வைத்த குற்​றச்​சாட்​டு​கள் இப்​போதும் அப்​படியே உள்​ளன. அதில் மாற்​றம் இல்​லை.

எல்​லாக் கட்​சிகளுக்​குமே முதல்​வர் கனவு இருக்​கிறது. பாமக-வுக்கு அந்​தக் கனவு கைகூட வாய்ப்​பிருப்​ப​தாக நம்​பு​கிறீர்​களா?

ஆம். அதிலென்ன சந்​தேகம்?

சுதந்​திர தினத்​தின் போது ஆளுநர் அளித்த தேநீர் விருந்​தில் முதல்வர் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் கலந்து கொண்டு அதற்கொரு நியாய​மும் சொன்​னார்​கள். ஆனால், குடியரசு தினத்தை முன்​னிட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்​கணித்து விட்டார்​களே..?

இந்த விவ​காரத்​தில் திமுக செய்​வது அப்​பட்​ட​மான சந்​தர்ப்​ப​வாத அரசி​யல். விடு​தலை நாளின் போது ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக புறக்​கணிப்​ப​தாக​வும், அரசு கலந்து கொள்​வ​தாக​வும் ஒரு விசித்​திர​மான காரணத்​தைக் கூறி​னார்​கள். திமுக-வுக்​கும் ஆளுநருக்​கும் எந்த மோதலும் இல்​லை. திமுக அரசுக்​கும், ஆளுநருக்​கும் இடை​யில் தான் மோதல்.

அவ்​வாறு இருக்​கும் போது மோதல் இருக்​கும் அரசு, ஆளுநரின் தேநீர் விருந்​தில் திமுக அரசு பங்​கேற்​கும்; மோதல் இல்​லாத திமுக-​வும், கூட்​டணி கட்​சிகளும் பங்​கேற்​காது என்​பது சரி​யானது அல்ல. இது கடுமை​யான விமர்​சனத்தை ஏற்​படுத்​தி​ய​தால் தான் குடியரசு நாளில் முதல்​வ​ரும் அமைச்​சர்​களும் தேநீர் விருந்தை புறக்​கணித்து விட்​டனர்.

ஆளுநர் - ஆளுங்​கட்சி மோதலில் யார் பக்​கம் நியாயமிருப்​ப​தாக நீங்​கள் கருதுகிறீர்​கள்?

ஆளுநர் பதவி தேவையற்ற ஒன்​று; மாநில சுயாட்​சிக்கு அது எதி​ரானது என்​பது தான் பாட்​டாளி மக்​கள் கட்​சி​யின் நிலைப்​பாடு. ஆனால், ஆளுநர் பதவி இருக்​கும் வரை ஆளுநரும், அரசும்​ தண்​ட​வாளத்​தைப்​ போல இணை​யாக பயணிக்​க வேண்​டும், இல்​லா​விட்​டால்​ மக்​கள்​ நலனும்​, அரசின்​ செயல்​பாடு​களும்​ தான்​ பா​திக்​கப்​படும். இதை உணர்ந்​து இரு தரப்​பும்​ ஒன்​றாகச்​ செயல்​பட வேண்​டும்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article