2025 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா - வங்கதேசம் போட்டி தேதி, நேரம், சேனல் மற்றும் ஸ்ட்ரீமிங் விவரம்

5 days ago
ARTICLE AD BOX

2025 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா - வங்கதேசம் போட்டி தேதி, நேரம், சேனல் மற்றும் ஸ்ட்ரீமிங் விவரம்

Published: Wednesday, February 19, 2025, 20:12 [IST]
oi-Aravinthan

துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை சந்திக்க உள்ளது. இந்தப் போட்டி பிப்ரவரி 20, வியாழன் அன்று நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன.

இந்தியா தனது போட்டிகள் அனைத்தையும் துபாயில் ஆட உள்ளதால், இந்தப் போட்டியும் அங்குதான் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டி நேரம், ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரங்கள் இங்கே:

Champions Trophy 2025 India vs Bangladesh in Dubai - Date Time How to WatchChampions Trophy 2025 India faces Bangladesh in their opening match of the Champions Trophy 2025 on February 20th at the Dubai International Stadium Find out the Indian time streaming options JioStar and TV broadcast details Star Sports Sports 18

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டி அட்டவணை, தேதி மற்றும் நேரம்:

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பிப்ரவரி 20 அன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்குத் தொடங்கும்.

டாஸ் நிகழ்வு:

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான டாஸ் நிகழ்வு மதியம் 2 மணிக்கு நடைபெறும். அதன் பின் 2:30க்கு போட்டி துவங்கும். இரவு 10:30 வரை போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஸ்ட்ரீமிங் தளத்தில் பார்ப்பது எப்படி:

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை ஜியோ ஸ்டார் (Jiostar) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் டிஸ்னி ஹாட்ஸ்டார் செயலியில் பார்க்கலாம். ஜியோஸ்டார் இணைய தளத்திலும் இந்தப் போட்டியைக் காணலாம்.

தொலைக்காட்சியில் நேரலையில் பார்ப்பது எப்படி:

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் குழும சேனல்களில் பார்க்கலாம். ஸ்போர்ட்ஸ் 18 குழும சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்படும். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த போட்டிக்கான ஒளிபரப்பு செய்யப்படும்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டி தேதி, நேரம், ஒளிபரப்பு:

போட்டி: இந்தியா vs வங்கதேசம், 2025 சாம்பியன்ஸ் டிராபி

தேதி: பிப்ரவரி 20, வியாழன்

நேரம்: போட்டி - பிற்பகல் 2:30 மணி (இந்திய நேரப்படி), டாஸ் - மதியம் 2:00 மணி (இந்திய நேரப்படி

இடம்: துபாய் சர்வதேச மைதானம்

ஸ்ட்ரீமிங்: ஜியோ ஸ்டார் ஆப் மற்றும் இணைய தளம்

தொலைக்காட்சி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க், ஸ்போர்ட்ஸ் 18

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, February 19, 2025, 20:12 [IST]
Other articles published on Feb 19, 2025
English summary
Champions Trophy 2025: India faces Bangladesh in their opening match of the Champions Trophy 2025 on February 20th at the Dubai International Stadium. Find out the Indian time, streaming options (JioStar), and TV broadcast details (Star Sports, Sports 18).
Read Entire Article