2000% லாபம் கொடுத்த எக்கோ ரீசைக்கிளிங் பங்கு.. வாங்கியிருந்தால் லட்சத்தில் லாபம்..!

12 hours ago
ARTICLE AD BOX

2000% லாபம் கொடுத்த எக்கோ ரீசைக்கிளிங் பங்கு.. வாங்கியிருந்தால் லட்சத்தில் லாபம்..!

Market Update
Updated: Monday, January 27, 2025, 9:52 [IST]

எக்கோ ரீசைக்கிளிங் லிமிடெட் நிறுவனம் மின்னணு உபகரணங்கள் மறுசுழற்சி தொழிலில் ஈடுபட்டுள்ளது. கழிவு மேலாண்மை வர்த்தகத்தில் இந்நிறுவனம் நிபுணத்துவம் பெற்றது. தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தின் நிர்வாகம், நிறுவனத்துக்கு தேவையான மூலதன நிதியை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு, எக்கோ ரீசைக்கிளிங் நிறுவனம், தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு (QIP) பங்குகள் ஒதுக்கி நிதி திரட்ட உள்ளதாக பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

2000% லாபம் கொடுத்த எக்கோ ரீசைக்கிளிங் பங்கு.. வாங்கியிருந்தால் லட்சத்தில் லாபம்..!

பங்குச் சந்தையில் செயல்படும் தகுதி வாய்ந்த நிறுவன வாங்குபவர்கள் போன்ற பெரிய முதலீட்டாளர்களுக்கு தங்கள் பங்குகளை விற்பதன் மூலம், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான மூலதனத்தை திரட்டுவதுதான் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்குகள் ஒதுக்கி நிதி திரட்டுவதாகும். கடந்த வியாழக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபிறகு, பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த இந்த அறிக்கையில் இந்த நிதி திரட்ட இருக்கும் தகவலை எக்கோ ரீசைக்கிளிங் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் காலாண்டுகளில் முறையே ரூ.7.41 கோடி மற்றும் ரூ.7.42 கோடி ஈட்டியுள்ளது. எக்கோ ரீசைக்கிளிங் பங்குகளும் முதலீட்டாளர்களுக்கு மல்டி பேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இப்பங்கின் விலை 104 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 2,000 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

அதேசமயம், இந்த ஆண்டில் இதுவரை இந்த பங்கின் விலை 16.81 சதவீதம் குறைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.78 சதவீதம் சரிந்து ரூ.807.40ல் முடிவுற்றது.

2024 ஜனவரி 25ம் தேதியன்று எக்கோ ரீசைக்கிளிங் பங்கு 52 வார குறைந்தபட்ச விலையான ரூ.378க்கு சரிந்தது. இருப்பினும் அதன் பிறகு அப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. அந்த ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி புதிய 52 வார உச்ச விலையான ரூ.1,215.10ஐ எட்டியது. அதன் பிறகு இப்பங்கின் விலை சரிவு கண்டு வருகிறது. தற்போது இப்பங்கின் விலை அதன் உச்ச விலையை காட்டிலும் சுமார் ரூ.400 குறைவாக உள்ளது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

Story written by: Subramanian

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary

Eco Recycling share gave above 2000 percent multibagger returns in 5 years

Eco Recycling share gave above 2000 percent multibagger returns in 5 years
Read Entire Article