“2000 பேர் மரணம்”… நாட்டையே உலுக்கிய மணிப்பூர் கலவரம்… முதல் முறையாக மனம் திறந்த பிரதமர் மோடி..!!

7 hours ago
ARTICLE AD BOX

அமெரிக்காவில் கடந்த 16ஆம் தேதி அன்று லெக்ஸ் பிரிட்மென் என்பவர், பிரதமர் மோடியுடன் 3 மணி நேரம் பாட்காஸ் நிகழ்ச்சி ஒன்று வெளியானது. அதில் பல்வேறு விஷயங்களை குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நான் குஜராத் முதல்வராக இருந்தபோது அங்கு முஸ்லிம்-இந்து சமூகங்களுக்கு இடையே கடந்த 2002-ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. இதனால் உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியிலிருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா என்ற பகுதியில் தீப்பிடித்து எறிந்தது. இதில் 59 இந்து யாத்திரிகர்கள் உயிரிழந்தனர்.

இதற்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்று கூறிய இந்துத்துவா அமைப்பினர் குஜராத் முழுவதும் தாக்குதலை தொடங்கினர். இதில் அகமதாபாத்தின் பாட்டியா பகுதியில் 97 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். சிறுவர்கள், ஆண்கள் படுகொலை செய்யப்பட்டனர். 2 வாரங்கள் நீடித்த இந்த வன்முறையால் 20 ஆயிரம் இஸ்லாமியர்களின் வீடு மற்றும் கடைகள், 360 மசூதிகள் அளிக்கப்பட்டன. 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிப்பெயர்ந்தனர். அரசு தகவலின் படி 790 இஸ்லாமியர்களும், 254 இந்துகளும் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மனித உரிமை அமைப்புகள் இதில் 2000த்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

இதற்கு மோடியும், காவல்துறையினரும் தான் முக்கிய காரணம் என்று அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியது. இதையடுத்து கடந்த 2005 ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம் ரயில் பெட்டியில் சமையல் செய்த போது ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தான் பலர் உயிரிழந்ததாகவும், கோத்ராவில் ரயில் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் உறுதி அளித்தது. இந்த கலவரத்தை அப்போது அம்மாநில முதல்வராக இருந்த மோடி கையாண்ட விதம், பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து கடந்த 2023 ஆம் ஆண்டு பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் மத்தியில் ஆளும் பாஜக அரசால் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article