2000 – 2008இல் பாக், ஆஸி, இங்கிலாந்தை ஜெய்ச்ச ரூட்டை ஃபாலோ பண்ணுங்க.. இந்திய அணிக்கு கங்குலி ஆலோசனை

11 hours ago
ARTICLE AD BOX

இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த நியூசிலாந்து தொடரில் சொந்த மண்ணில் இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் 12 வருடங்களாக சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவின் உலக சாதனை நிறைவுக்கு வந்தது.

அப்படியே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா பிரம்மாண்ட வெற்றி பெற்றது. ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் சுமாராக விளையாடிய இந்தியா 3 – 1 (5) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அதனால் 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் கோட்டை விட்ட இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது.

டெஸ்டில் சுமார்:

இந்நிலையில் தற்சமயத்தில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமாராக விளையாடுவதாக ஜாம்பவான் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். தங்களது காலத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளில் 500, 600, 700 போன்ற பெரிய ஸ்கோர் அடித்ததாலேயே இந்தியா வென்றதாக கங்குலி கூறியுள்ளார். ஆனால் இப்போதெல்லாம் இந்திய பேட்ஸ்மேன்கள் 300 ரன்கள் அடிக்க தடுமாறுவதாலேயே தோல்வி கிடைப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

எனவே வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து நடைபெறும் டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியா பெரிய ஸ்கோர் குவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது பற்றி கங்குலி பேசியது பின்வருமாறு. “இந்தியா வெளிநாடுகளில் அசத்திய காலங்களை பாருங்கள். அப்போதெல்லாம் நாம் 400 – 500 ரன்கள் அடித்திருப்போம். எங்களுடைய காலத்தைப் பற்றி பேசுகிறீர்கள்”

கங்குலி ஆலோசனை:

“அந்தக் காலங்களில் நாங்கள் இங்கிலாந்தில் வென்றோம். உலகின் சிறந்த அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வென்றோம். பாகிஸ்தானுக்கு சென்று வென்றோம். 600 ரன்கள் அடித்ததாலேயே அங்கே நாங்கள் வெற்றி பெற முடிந்தது. பாகிஸ்தானில் நடைபெற்ற 2004 டெஸ்ட் தொடரில் முல்தானில் 600 அடித்தோம். லாகூரில் 400 அடித்தோம். ராவல்பிண்டியில் 700 அடித்தோம்”

இதையும் படிங்க: கோலி, ஜெய்ஸ்வால் தவிர யார்கிட்டயும் 40 இல்ல.. இங்கிலாந்தில் வெல்ல இந்தியா இதை செய்யனும்.. கங்குலி கவலை

“ஆஸ்திரேலியாவில் காபாவில் 500, அடிலெய்டில் 500, சிட்னியில் 700 அடித்தோம். அந்த வகையில் நீங்கள் டெஸ்ட் போட்டியை வெல்வதற்கு பெரிய ரன்கள் அடிக்க வேண்டும். வெறும் 200, 250 அல்லது 180 அடிப்பதால் வெற்றி பெற முடியாது. கடந்த ஆஸ்திரேலியா தொடரில் 400 ரன்கள் அடித்ததாலேயே முதல் போட்டியில் நாம் வென்றோம். அந்தப் போட்டியில் சதத்தை அடித்த ஜெய்ஸ்வால் தற்சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்படுகிறார்” என்று கூறினார்.

The post 2000 – 2008இல் பாக், ஆஸி, இங்கிலாந்தை ஜெய்ச்ச ரூட்டை ஃபாலோ பண்ணுங்க.. இந்திய அணிக்கு கங்குலி ஆலோசனை appeared first on Cric Tamil.

Read Entire Article