200% வரைக்கும் ஃபைன் போடுவாங்க.. வருமான வரி காட்டுறீங்களா? அரசு கையில் எடுத்த சவுக்கு.. கவனம்

4 days ago
ARTICLE AD BOX

200% வரைக்கும் ஃபைன் போடுவாங்க.. வருமான வரி காட்டுறீங்களா? அரசு கையில் எடுத்த சவுக்கு.. கவனம்

Chennai
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுக்க பல சம்பளதாரர்களுக்கு வருமான வரித்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த முறை பொய்யான வீட்டு வாடகை பில்களை கொடுத்தவர்களை சோதனை செய்ய தொடங்கி உள்ளது. வருமான வரி விலக்கு பெறுவதற்காக பலரும் பொய்யாக வீட்டு வாடகை பில் கொடுக்கின்றனர்.

இந்த நிலையில் சிலர் 1 லட்சத்திற்கும் மேல் வருடம் வாடகை கட்டுவதாக கணக்கு காட்டுகின்றனர். இதற்கு பொய்யான பான் கார்டு விவரங்களை வீட்டு ஓனர் விவரம் என்று பலர் அளிப்பது உண்டு. முக்கியமாக பல சிஏக்கள் ஒரே மாதிரியான பொய்யான பான் கார்டு விவரங்களை பல கிளைண்டுகளுக்கு பயன்படுத்துவது உண்டு.

income tax

இப்படிப்பட்ட விவரங்களை வைத்து தவறாக refund பெறக்கூடியவர்களை வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது. இவர்களுக்கு கடந்த 2 நாட்களாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. முக்கியமாக் 1 லட்சத்திற்கு மேல் வாடகை கணக்கு காட்டியவர்களுக்குத்தான் பான் கார்டு அவசியம் என்பதால் அவர்களைத்தான் வருமான வரி துறை விசாரிக்க தொடங்கி உள்ளது. இவர்கள் விளக்கம் அளிக்க நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது. மார்ச் 31, 2024 இல் வரை இதற்காக காலக்கெடு உள்ளது. இதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் அதற்கு உரிய வரி மட்டும்.. 200%மாக உயர்த்தப்பட்டு அபராதமாக விதிக்கப்படும்.

இன்னொரு நோட்டீஸ்

அதேபோல் அரசியல்கட்சிகளுக்கு நிதி அளிக்கும் 80ஜிசிசி பிரிவில் கீழ் விலக்கு பெற்றவர்கள் அதற்கான சான்றை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 31, 2024 இல் வரை இதற்காக காலக்கெடு உள்ளது.

இதற்குள் திருத்திய வரி செலுத்துவோர் 25-50 சதவீத அபராதம் இல்லாமல் சிறு வரி முரண்பாடுகளை, வழக்குகளை தீர்க்க கூடுதல் அவகாசம் வழங்கப்படும்.

பொதுவாக வரி கட்டுவதில் குறைபாடு இருந்தால் அதற்கு 10% அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் அந்த அபராதம் இல்லாமல் வரியை மார்ச் 31ம் தேதிக்குள் கட்ட முடியும். ஆனால் சிறிய அளவிலான வரி முரண்பாடுகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். அரசியல்கட்சிகளுக்கு நிதி அளிக்கும் 80ஜிசிசி பிரிவில் கீழ் விலக்கு பெற்றவர்கள் அதற்கான சான்றை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பலர் இதை பயன்படுத்தி விலங்குகளை பெற்ற நிலையில் அரசு இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 பட்ஜெட்டில் வருமான வரி ஸ்லாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ₹10 லட்சம் வரை சம்பளம் வாங்கும் நபர்கள் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

₹10 லட்சம் வரை வருமானம் ஈட்டினால் வரி விலக்கு உறுதி, ₹15 முதல் 20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25% வரி ஸ்லாப்பை அறிமுகப்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதாம்.

இப்போது உள்ள நடைமுறை: தற்போது வருமான வரி விதிப்பில் இரண்டு முறைகள் உள்ளன. இந்த இரண்டு முறைகளில் ஒன்றை மக்கள் தேர்வு செய்ய முடியும்.

முதல் முறை - பழைய வரி விதிப்பு முறை. இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.

10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிய முறை; பழைய முறை வேண்டாதவர்கள் புதிய முறையை பின்பற்ற முடியும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதில் இன்று மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு முன்பு வரை, நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும்.

அதுவே 5 லட்சத்தில் இருந்து 7.5 லட்சம் வரை வாங்கினால் 10 சதவிகிதம் வரி இருக்கும். 7.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 15 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை 20% வரி 20 சதவிகிதம் வரி விதிக்கப்படும். நடைமுறையில் இருந்த இந்த புதிய வரி விதிப்பு முறையில் கடந்த பட்ஜெட்டில் மாற்றம் செய்யப்பட்டது.

அதன்படி புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 7 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 7க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது.

அதுவே நீங்கள் 7.10 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 0 - 300000 வருமானத்திற்கு : 0 சதவீத வரி விதிக்கப்படும் . 300000-600000 வருவாய்க்கு : 5 சதவீத வரி விதிக்கப்படும் . 600000 -900000 விதிக்கப்படும் : 10 சதவீத வரி விதிக்கப்படும் 900000 - 1200000 வருவாய்க்கு : 15 சதவீத வரி விதிக்கப்படும் 1200000 -1500000 வருவாய்க்கு : 20சதவீத வரி விதிக்கப்படும் 15 மேல் வருவாய்க்கு : 30 சதவீத வரி விதிக்கப்படும் . புரிகிறபடி சொன்னால்.. 7 லட்சத்திற்கு வரி இருக்காது.

ஆனால் நீங்கள் 8 லட்சம் வருமானம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.. இப்போது அந்த 8 லட்சத்தில் முதல் 3 லட்சத்திற்கு வரி இல்லை. 3-6 லட்சத்திற்கு 5 சதவிகிதம் வரி உள்ளது. 6 -9 லட்சத்திற்கு 10 சதவிகிதம் வரி உள்ளது. இதனால் 35,000 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டி இருக்கும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதனால் இதை அப்படியே கட்ட வேண்டி இருக்கும்.

More From
Prev
Next
English summary
The income tax department sends notices on Rental allowance fake bills to many seeking explanations
Read Entire Article