200-300.. ஹர்திக் குல்தீப் ஸ்பெஷல் ரெக்கார்ட்.. ஒரே போட்டியில் சோகமும் சாதனையும் நடக்குமா?

2 days ago
ARTICLE AD BOX

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் சிறப்பான பந்துவீச்சின் மூலம் தனிப்பட்ட மைல் கற்களை எட்டி அசத்தியிருக்கிறார்கள்.

இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. காயத்தால் வெளியேறிய பகார் ஜமான் இடத்திற்கு இமாம் உல் ஹக் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

ஹர்திக் பாண்டியா தந்த முதல் திருப்பம்

பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக பாபர் அசாம் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் பேட்டிங் செய்ய வந்தார்கள். இந்திய அணிக்கு பந்துவீச்சை துவங்கிய முகமது ஷமி முதல் ஓவரில் 5 வைடுகள் வீசி பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு அழுத்தத்தை குறைத்தார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் முன்னேறி செல்ல ஆரம்பித்தது.

இந்த நிலையில் பந்து வீச்சுக்கு வந்த ஹர்திக் பாண்டியா சிறப்பான முறையில் பந்துவீசி பாபர் அசாமை 23 ரன்னில் வெளியேற்றினார். இதைத்தொடர்ந்து இன்னொரு துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு 10 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

கடமையை செய்யாமல் விட்ட கேப்டன்

இதைத் தொடர்ந்து கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் துணை கேப்டன் சவுத் ஷகீல் இருவரும் மிகவும் பொறுமையாக விளையாட ஆரம்பித்தார்கள். இந்த ஜோடி பொறுமையாக விளையாடிய 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதைத்தொடர்ந்து கேப்டன் முகமது ரிஸ்வான் 77 பந்துகளில் 44 ரன்கள், சவுத் ஷகீல் 76 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு சல்மான் அலி ஆகா 19, தயாப் தாகீர் 4, ஷாகின் அப்ரிடி 0, நசிம் ஷா 14, குஷ்தில் ஷா 38 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் பாகிஸ்தான அணி 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க : நான் ஏதாவது சொன்னால் இன்சமாம் வருத்தப்படுவார்.. அவர் மருமகன் செஞ்சது முட்டாள்தனம் – வாசிம் அக்ரம் கருத்து

இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் 3, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். மேலும் குல்தீப் யாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் 300 வது விக்கெட்டையும், ஹர்திக் பாண்டியா 200 வது விக்கெடையும் கைப்பற்றினார்கள். மேலும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றால் முதல் அணியாக வெளியேறுவதும், இந்திய அணி வென்றால் முதல் அணியாக செமி பைனலுக்கு தகுதி பெறுவதும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 200-300.. ஹர்திக் குல்தீப் ஸ்பெஷல் ரெக்கார்ட்.. ஒரே போட்டியில் சோகமும் சாதனையும் நடக்குமா? appeared first on SwagsportsTamil.

Read Entire Article