ARTICLE AD BOX
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித். இவருக்கு ஸ்ரீது என்ற மனைவியும், தேவேந்து என்ற 2 வயது மகளும், 8 மாதத்தில் மற்றொரு பெண் குழந்தையும் உள்ளது. நேற்று முன் தினம் இரவு தந்தை ஸ்ரீஜித்துடன் தூங்கிக்கொண்டிருந்த 2 வயது குழந்தையை நேற்று அதிகாலை 5 மணி அளவில் காணவில்லை என பாலராமபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தார்.
போலீஸாரும், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் தேவேந்துவின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களின் வீட்டு அறையில் கிடந்த கட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. மற்றொரு இடத்தில் மூன்று கயிறுகளை தூக்குப்போடும் வகையில் சுருக்கு போட்டு கட்டி வைக்கப்பட்டிருந்தது. இதனால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், வீட்டு வளாகத்தில் உள்ள கிணற்றை ஆய்வு செய்தனர்.
உலகிலேயே முதன்முறையாக `குடித்துவிட்டு ட்ரோன் இயக்கிதற்காக ரூ.2.5 லட்சம் அபராதம்' - எங்கே?கிணற்றை மூடப்பட்டிருந்த வலை ஒருபக்கத்தில் விலகி இருந்தது. இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் கிணற்றி இறங்கி தேடியபோது அங்கு குழந்தை தேவேந்துவின் சடலம் மீட்கப்பட்டது. குழந்தை தானாகச் சென்று கிணற்றில் குதிக்க வாய்ப்பு இல்லை என்பதாலும், வீட்டில் உள்ளவர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.
அந்த வீட்டில் தேவேந்துவின் பெற்றோர், ஸ்ரீதுவின் சகோதரனும் குழந்தையின் தாய்மாமாவுமான ஹரிகுமார் மற்றும் ஸ்ரீதுவின் தாய் ஸ்ரீகலா ஆகியோரும் இருந்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் குழந்தையின் தந்தை அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது. எனவே, அவருக்கும் குழந்தையின் மரணத்துக்கும் சம்பந்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர் போலீஸார். குழந்தையின் பாட்டியான ஸ்ரீகலாவிடம் விசாரித்ததில் அவருக்கு இந்த விஷயத்தில் பங்கில்லை என போலீஸார் விடுவித்தனர்.
இறுதியாக குழந்தையின் தாய் ஸ்ரீது, அவரது சகோதரன் ஹரிகுமார் ஆகியோர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் தனித்தனி அறையில் வைத்து ஒரே மாதிரியான கேள்விகளை இருவரிடமும் கேட்டு விசாரணை நடத்தியது போலீஸ். அதில் சகோதரி மீதான கோபத்தில் குழந்தையை கொலை செய்ததாக ஹரிகுமார் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து ஹரிகுமார் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே விசாரானையை திருப்பும் விதமாக ஹரிகுமார் செயல்பட்டார். வெளியிலிருந்து யாரோ வந்து வீட்டு கட்டிலில் தீ வைத்து விட்டு குழந்தையை தூக்கிச் சென்றதாக விசாரணையை திசை திருப்ப முயன்றார். குழந்தையை காணாததால் தற்கொலையில் ஈடுபட உள்ளதாக காட்டுவதற்கு 3 கயிறுகளை கட்டி வைத்திருந்தார்.
ஹரிகுமார் மற்றும் ஸ்ரீது-வின் மொபைல்களை பரிசோதித்தபோதுதான் அவர்கள் குடும்பத்தில் சில பிரச்னைகள் இருப்பது தெரியவந்தது. ஸ்ரீது-வுக்கும்.அவரது கணவர் ஸ்ரீஜித்துக்கும் இடையே மனகசப்பு இருந்து வந்துள்ளது. இதனால் ஸ்ரீஜித் அவ்வப்போதுதான் ஸ்ரீது-வின் வீட்டுக்கு வந்து செல்வார். இவர்களுக்கு வருமானம் சொல்லும்படியாக இல்லாத நிலை உள்ளது. இந்த விவகாரத்தில் சகோதரியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஹரிகுமார் 2 வயது குழந்தைதை கிணற்றில் வீசி கொலை செய்தது தெரியவந்துள்ளது" என்றனர்.
வேலூர் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை : `ஆட்டோ கேங்’ 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை