2 லட்சம் டெபாசிட் செய்தால் 32 ஆயிரம் வட்டி.. பெண்களுக்கான வேறலெவல் சேமிப்பு பிளான்..!! 

2 hours ago
ARTICLE AD BOX

தற்போதைய காலக்கட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். பெண்கள் இல்லாத துறையே இல்லை எனும் அளவிற்கு, அவர்களுக்கான பிரதிநிதித்துவம் எல்லாம் துறைகளிலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகளும் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்காக பிரத்யேகமான திட்டமாக மகிளா சம்மான் சேமிப்பை செயல்படுத்தி வருகிறது. 

இரண்டு ஆண்டுகள் கால அளவிலான முதலீடு கொண்ட இத்திட்டமானது, பெண்கள் முதலீட்டில் நல்ல வருமானம் ஈட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் தபால் அலுவலகத்தின் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், சந்தை ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டியதில்லை.

இதில் உங்களுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் 2 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இரண்டு வருடங்களில் முதலீட்டிற்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது, பெண்கள் சேமிக்கவும், தன்னிறைவு பெறவும் உதவும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்துக்கும் அரசு வரிவிலக்கு அளித்து வருகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பெண்களுக்கு வரிச் சலுகையும் கிடைக்கும்.

இத்திட்டத்தின் கீழ், 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களும் தங்கள் கணக்குகளைத் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் கீழ், இரண்டு ஆண்டுகளுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் ஒருவர் ரூ.2,00,000 முதலீடு செய்தால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகையாக ரூ.2,32,044 கிடைக்கும். இதன் மூலமாக வட்டியாக மட்டுமே ரூ.32,044 பெற முடியும். இப்படி குறுகிய காலத்தில் நல்ல வருமானத்தை இத்திட்டத்தின் வாயிலாக முதலீட்டாளர்கள் பெற முடியும்.

Read more: தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி..!! – அண்ணாமலை பேட்டி

The post 2 லட்சம் டெபாசிட் செய்தால் 32 ஆயிரம் வட்டி.. பெண்களுக்கான வேறலெவல் சேமிப்பு பிளான்..!!  appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article