ARTICLE AD BOX
திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வரும் சிறுமி பிரியா (வயது 17). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில், பனிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். தற்போது சிறுமி பிரியா, அரசுப் பொதுத்தேர்வை எதிர்கொண்டு இருக்கிறார்.
இதனிடையே, சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமி, உடலில் பெட்ரோல் ஊற்றி தீ பற்றவைத்து தற்கொலைக்கு முயற்சித்தார். இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி தற்கொலை
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: வேலை கொடுத்த முதலாளி வீட்டுக்கே துரோகம்; பெண் செய்த பகீர் செயல்.!
மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 92 விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவி, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் தற்கொலை செய்துகொண்டார்.
இதையும் படிங்க: மஞ்சள் தாலி ஈரம் காயல.. புதுமாப்பிள்ளை விபத்தில் பலி.. தங்கச்சிக்கு என்ன சொல்லுவேன்? - கண்ணீரில் வெதும்பிய இளைஞர்.!