ARTICLE AD BOX
நவீன வாழ்க்கையில், வீட்டைத் தினமும் சுத்தமாக வைத்திருப்பது பலருக்கும் சவாலாக உள்ளது. எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும், சில இடங்களைச் சுத்தம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். குறிப்பாக, குளியலறை, சமையலறை போன்ற இடங்களில் உள்ள குழாய்களைத் தினமும் சுத்தம் செய்வது எளிதான காரியமல்ல.
குழாய்களில் நீர் சொட்டு சொட்டாக விழுந்து, அதனுடன் சேர்ந்து அழுக்கு, பாசி போன்றவை படிந்து விடும். இவற்றை சுத்தம் செய்ய ஒரு நாள் ஆகிவிடும். சில வீடுகளில் இதை சுத்தம் செய்வதையே தவிர்த்து விடுவார்கள். வீடுகளில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் இருக்க கட்டாயம் நீங்கள் இதை எல்லாம் சுத்தம் செய்தே ஆக வேண்டும். ஆனால் அது நாள் பட்ட கரையாகவும், கிச்சன் சிங்கில் சாப்பாடு கழிவு என்று இருப்பதால் மிகவும் அசுத்தமாகவும், துர்நாற்றத்துடன் இருக்கும் என்பதால் நீங்கள் எப்படி சுத்தம் செய்வது என்று யோசிப்பீர்கள்.
ஆனால், இனி கவலைப்படத் தேவையில்லை! உங்கள் குழாய்களை எப்போதும் பளிச்சென்று வைத்திருக்க 2 எளிய குறிப்புகள் உள்ளன.
இந்த 2 பொருட்களை இனி உபயோகப்படுத்துவதன் மூலம் நீங்கள் வாழ்நாளில் பைப்களை சுத்தம் செய்யும் வேலை இருக்காது. அது என்னவென்று பார்க்கலாம்.
அலுமினியத் தாள் (Aluminium sheet):
சாதாரண அலுமினியத் தாளை எடுத்து குழாயின் அளவிற்கு வெட்டி, சுற்றி வைத்து விடுங்கள். அவ்வளவுதான்! அலுமினியத் தாள் அழுக்கு, பாசி போன்றவை படிவதைத் தடுத்து நிறுத்தும்.
மிதிவண்டி டயர்:
பழைய மிதிவண்டி டயரைக் கூட இதற்குப் பயன்படுத்தலாம். குழாயின் அளவிற்கு டயரை வெட்டி, குழாயைச் சுற்றி மாட்டி விடுங்கள். டயர் இருப்பதால் குழாய் அழுக்காகாது.
இந்த 2 குறிப்புகளையும் முயற்சி செய்து பாருங்கள். குழாய் சுத்தம் செய்வதிலிருந்து சிறிது காலத்திற்கு விடுதலை கிடைக்கும்.