ARTICLE AD BOX
ஹங்கேரியில் இரண்டு குழந்தைகள் மற்றும் அதற்கும் மேல் குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் வருமான வரி கட்டத் தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
முன்பெல்லாம் இந்தியாவில் ஒரு நபர் 10 குழந்தைகள் வரை பெற்று வளர்த்தனர். ஆனால், படிபடியாக இந்த எண்ணிக்கை குறைந்து தற்போது ஒரு குழந்தையில் வந்து நிற்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் ஒரு குழந்தையை படித்து ஆளாக்கி வளர்ப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது.
இதனால் மக்கள் தொகை குறைந்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளில் ஏற்கனவே இந்த அச்சம் வந்துவிட்டது.
ஆம்! தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தங்கள் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருவதாக சீனா அறிவித்துள்ளது. 2024இல் மக்கள் தொகை 14 லட்சம் குறைந்து 140 கோடியே 8 லட்சமாக இருந்தது என்கிறது சீன அரசு.
இந்த நிலை சீனாவில் மட்டுமல்ல ஜப்பன், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.
அதேபோல்தான் ஹங்கேரியிலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தொகை எண்ணிக்கை பின்னடைவை சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்த நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அதாவது ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு 30 வயது வரை வருமான வரியிலிருந்து விலக்கும், அதே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் கடந்த 2019ம் ஆண்டிலிருந்தே இருந்து வருகிறது. அதாவது அப்போது நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெறும் தாய்மார்களுக்கு வருமானவரி செலுத்துவதில் இருந்து வாழ்நாள் விலக்கு என்று அறிவிக்கப்பட்டது. இப்போது இந்த திட்டம்தான் விரிவாக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே அந்த அரசு இளம் பெற்றோர்களுக்கு வட்டி இல்லா கடன், 3 குழந்தைகள் பிறந்த பின்னர் கடன் இரத்து போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.