177 ரன்ஸ்.. 9 ஓவரில் 108.. இங்கிலாந்தை புரட்டிய ஆப்கன்.. இப்ராஹிம் தனித்துவ சாதனையுடன் உலக சாதனை

1 day ago
ARTICLE AD BOX

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பிப்ரவரி 26ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் எட்டாவது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் வலுவான இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டது. இந்திய நேரப்படி மதியம் 2:00 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு ரகமனுல்லாஹ் குர்பாஸ் 6, செதிகுல்லா 4, ரஹ்மத் ஷா 4 ரன்களில் ஜோப்ரா ஆர்ச்சர் வேகத்தில் அவுட்டானார்கள். அடுத்ததாக 37-3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு மற்றொரு துவக்க வீரர் இப்ராஹிம் ஜாட்ரான் நிதானமாக விளையாடினார். அவருடன் கேப்டன் ஷாகிதி ஜோடி சேர்ந்து நங்கூரமாக விளையாடினார்.

இப்ராஹிம் அபாரம்:

அந்த வகையில் 4வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி ஆப்கானிஸ்தானை சரிவிலிருந்து மீட்டெடுத்தது. அதில் கேப்டன் சாகிதி 40 ரன்கள் எடுத்த போது அடில் ரசித் சுழலில் சிக்கினார். இருப்பினும் மறுபுறம் அசத்திய இப்ராஹிம் அரை சதத்தை கடந்தார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்து விளையாடிய ஓமர்சாய் தனது பங்கிற்கு 41 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

இந்த பக்கம் நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலான இப்ராகிம் வேகமாக ரன்களை குவித்து சதத்தை அடித்தார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த முகமது நபி அதிரடியாக விளையாடினார். அந்த வகையில் டெத் ஓவர்களில் மிரட்டலாக பேட்டிங் செய்த இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. அதில் இப்ராஹிம் 150 ரன்கள் தாண்டி 12 பவுண்டரி 6 சிக்ஸருடன் 177 (146) ரன்கள் குவித்து அவுட்டானார்.

ஆப்கானிஸ்தான் அசத்தல்:

இதன் வாயிலாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் இதே தொடரில் இங்கிலாந்தின் பென் டக்கெட் 165 ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு எடுத்ததே முந்தைய சாதனை. அத்துடன் 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 2 தொடர்களிலும் சதத்தை அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் இப்ராஹிம் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 20 நாட்களுக்கு முன்னதாக சென்னை வந்தடைந்த தல தோனி.. 43 வயதிலும் இப்படி ஒரு டெடிகேஷனா? – விவரம் இதோ

இறுதியில் நபி 2 பவுண்டரி 3 சிக்சருடன் 40 (24) ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் ஆப்கானிஸ்தான் 325-7 ரன்களை எடுத்து அசத்தியது. குறிப்பாக கடைசி 10 ஓவரில் மட்டும் இங்கிலாந்தை புரட்டி எடுத்து ஆப்கானிஸ்தான் 113 ரன்கள் குவித்தது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஆர்ச்சர் 3, லியாம் லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

The post 177 ரன்ஸ்.. 9 ஓவரில் 108.. இங்கிலாந்தை புரட்டிய ஆப்கன்.. இப்ராஹிம் தனித்துவ சாதனையுடன் உலக சாதனை appeared first on Cric Tamil.

Read Entire Article