ARTICLE AD BOX
நமது உடலில் முக்கிய உறுப்பான மூக்கு, காற்றை தவிர்த்து பிற பொருட்களை நுழைய மறுத்து தும்மலை ஏற்படுத்துகிறது. தும்மல் பிறந்த குழந்தை முதல் உயிர் இருக்கும் அனைத்து உயிரினத்திற்கும் பொதுவானது ஆகும். தும்மல் அடிக்கடி ஏற்படுதல் அல்லது தொடர்ந்து தும்மல் ஏற்படுவது அலர்ஜி, ஒவ்வாமை காரணமாக இருக்கலாம்.
சமையல் அறை, வாகனம், தொழிற்சாலை, சாம்பிராணி போன்றவற்றில் இருந்து வெளிப்படும் புகை, வீட்டை சுத்தம் செய்யும்போது உண்டாகும் தூசு போன்றவையும் தும்மலை உண்டாக்கும். அதிகம் சாப்பிடுவதும் தும்மலுக்கு காரணமாக அமையும். அதேபோல, காரத்தன்மை கொண்ட பொருட்கள் மூக்கினுள் சென்றாலும் தும்மல் ஏற்படும்.
இதையும் படிங்க: அன்றாடம் ஏசி பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சி.! இவ்வளவு ஆபத்துகளா.?!
ஒருமுறை தும்மினால் 40 ஆயிரம் நுண் துளிகள்
தும்மல் சராசரியாக 160 கிமீ வேகத்தில் பயணம் செய்யும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆழ்ந்த உறக்கத்தில் தும்மல் ஏற்படுத்தாது என்னினும், அதிக நரம்பின் தூண்டல் உறக்கத்தை கலைத்து தும்மலை உண்டாக்கும். ஒருமுறை நாம் தும்மும்போது, மூக்கின் 2 துவாரத்தில் இருந்து 40 ஆயிரம் திரவ நுண்துளிகள் வெளியே சிதறும்.
தும்மலை தடுக்காதீங்க, பாதுகாப்பில் பாரபட்சம் வேண்டாம்:
பாக்டீரியா, வைரஸ் நமது மூக்கில் இருந்தாலும் அவை வெளியேறும். இவ்வாறாகவே வைரஸ்களும் பரவுகிறது. இதனால் தான் கொரோனா சமயத்தில் முகக்கவசம் அணிவது வலியுறுத்தப்பட்டது. தும்மல் வரும்போது முகத்தை, குறைந்தபட்சம் மூக்கை மூடியாவது தும்ம வேண்டும். சிலருக்கு வேகத்துடன் காதுகளும் அடைக்கலாம். தும்மலை தடுக்க முற்படுவது விபரீதத்தை ஏற்படுத்தலாம்.
மழைக்காலங்களில் இயல்பாக ஏற்படும் ஜலதோஷம் தும்மலை உண்டாக்கும். தும்மலுடன் அதிக ஜலதோஷம், மூச்சுத்திணறல், வாந்தி,கண்கள் எரிச்சல், தொண்டை கட்டுதல், காய்ச்சல் இருந்தால் மருத்துவரை சந்திப்பது நல்லது. தும்மல் அலர்ஜி இருப்போர், அறைகளை சுத்தம் செய்வதை தவிர்க்கலாம்.
இதையும் படிங்க: தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.?!