ARTICLE AD BOX
பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் அகிப் ஜாவேத் தங்கள் அணி தோல்விக்கான காரணத்தையும் இந்திய அணி துபாயில் ஒரே மைதானத்தில் விளையாடுவது குறித்தும் மிகவும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
தற்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த நாட்டின் அணி முதல் அணியாக சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்டது. இதன் காரணமாக அந்த அணியின் மீது பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய அளவில் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.
இந்திய அணி வெல்ல உண்மை காரணம் இதுதான்
இது குறித்து பேசி இருக்கும் அகிப் ஜாவேத் கூறும் பொழுது “பாருங்கள், இந்திய அணி ஒரு காரணத்திற்காக துபாயில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக ஒரே மைதானத்தில் விளையாடுவது தொடர்ந்து ஒரே ஹோட்டலில் அலையாமல் தங்குவது என்பது நன்மை தரக்கூடியதுதான். ஆனால் இந்திய அணிக்கு கிடைத்த இந்த நன்மையால் மட்டுமே நாங்கள் தோற்கவில்லை. நாங்கள் அவர்களுடன் அங்கு விளையாடிய பொழுது அவர்கள் அதே மைதானத்தில் பத்து போட்டியை விளையாடியவர்கள் போன்று விளையாடவும் இல்லை”
“வாழ்க்கையில் எப்பொழுதும் சாக்குப் போக்குகள் சொல்லக்கூடாது. ஒரு போட்டிக்கு முன்பாக அணி நல்ல நம்பிக்கை உடன் இருக்கிறது. ஆனால் நாம் விரும்பியபடி திட்டமிட்டபடி விஷயங்கள் செல்லாமல் நாம் தோல்வி அடையும் பொழுது, வீரர்கள் பெரிய அளவில் ஏமாற்றம் அடைகிறார்கள் மேலும் மன ரீதியாக காயமடைகிறார்கள்”
உண்மையில் வீரர்கள் பாவம்
“பாகிஸ்தான் அணியை சிறப்பானதாக மாற்ற நாம் முயற்சி மட்டுமே செய்ய முடியும். ஒரு தோல்விக்குப் பிறகு ரசிகர்கள் பத்திரிகையாளர்களை விட வீரர்கள்தான் அதிகம் காயப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எங்களிடம் என்ன குறை இருந்தாலும் அதை நாங்கள் மேம்படுத்த வேண்டும். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்”
இதையும் படிங்க: இவங்களுக்கு தண்ணீல கண்டம்! வசமாக சிக்கிய தென்னாப்பிரிக்கா.. தப்பிய ஆஸி.. ஆகாஷ் சோப்ரா கருத்து
“ஒரு அணி வெற்றி பெற வேண்டுமென்றால் அந்த அணிக்கு அனுபவம் மிகவும் அவசியம். இந்திய அணிக்கு விளையாடிய 11 வீரர்களையும் எடுத்து பார்க்கும் பொழுது அவர்கள் அனைவரும் விளையாடிய போட்டிகள் 1500 க்கு மேல் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணியை எடுத்துப் பார்க்கும் பொழுது இது 400 போட்டிகள்தான் வருகிறது. பாகிஸ்தான் தோல்விக்கு அனுபவம் இன்மை முக்கிய காரணம்” என்று கூறியிருக்கிறார்.
The post 1500 போட்டிகள்.. இந்தியா துபாயில் ஆடறதால ஜெயிக்கல.. நேர்மையா சொல்றேன் – பாக் கோச் பேச்சு appeared first on SwagsportsTamil.