ARTICLE AD BOX
14 மணி நேர வேலை கட்டாயமா? பெங்களூரில் கொந்தளிக்கும் ஐடி ஊழியர்கள்! தீவிரமாகும் போராட்டம்.!!
பெங்களூரு, இந்தியாவின் மிகப்பெரிய ஐடி மையமாக விளங்குகிறது. பல்வேறு சாஃப்ட்வேர் நிறுவனங்கள் இங்குள்ளது. மேலும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இத்துறையில் வேலை செய்கின்றனர். ஆனால், வேலை நேர கடுமை, கூடுதல் வேலைச் சுமை மற்றும் இதனால் ஏற்படும் உடல் நல குறைவு, மன அழுத்தம் ஆகியவை ஊழியர்களை கடுமையாக பாதிக்கின்றன.
அதே நேரத்தில், கர்நாடக அரசு "கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 1961" திருத்தம் மூலம், தினசரி வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 14 மணி நேரமாக உயர்த்தும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரிவில் நூற்றுக்கணக்கான ஐடி ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை ஃப்ரீடம் பார்க்கில் போராட்டம் நடத்தினர். அவர்கள் ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலை ஒவ்வொரு பணியாளரின் உரிமை என வலியுறுத்தினர்.

தற்போது, பல ஐடி நிறுவனங்களில் பணியாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். கூடுதல் வேலை நேரத்திற்காக ஊதியம் வழங்கப்படுவதில்லை. காலத்திற்கேற்ப மாற்றப்படும் வேலை நேரம் குறித்து மன அழுத்தம், உடல்நலப் பிரச்சினைகள் ஆகியவை ஐடி ஊழியர்களின் நிலையை மோசமாக்கியுள்ளது.
ஏன் போராட்டம் அவசியமாகியது? ஐடி ஊழியர்கள் ஏற்கனவே 12-16 மணி நேரம் வேலை செய்கிறார்கள். கூடுதல் வேலைக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு அதிகரிப்பு. வேலை நேர அதிகரிப்பு பெண்கள் தொழிலில் நீடிக்க இயலாத சூழலை உருவாக்குகிறது. வேலைக்கு வெளியே தனிப்பட்ட வாழ்க்கை மீதான அருகல் குறைந்து வருகிறது.
ஒரு ஆய்வின்படி, 70% ஐடி ஊழியர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். தொடர்ந்து அதிக வேலை நேரம், ஒழுங்கற்ற கால அட்டவணை, நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது போன்றவை முதுகு வலி, கண் பிரச்சினை, தூக்கமின்மை போன்ற உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன.
பெங்களூரில் நடைபெற்ற இந்தப் பேரணியில் பல தொழிலாளர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர். மென்பொருள் பொறியாளர் ராம் குமார் கூறியதாவது, "நாங்கள் ஏற்கனவே வேலைக்கு அனைத்து நேரத்தையும் ஒதுக்கி உள்ளோம். இனியும் வேலை நேரம் அதிகரித்தால், அது ஒடுக்குமுறையாக இருக்கும். அரசு இதை தடுக்க வேண்டும்." மேலும், தொழிற்சங்க துணைத் தலைவர் ரஷ்மி சவுத்ரி கூறியதாவது, "பெண்களுக்கு ஏற்கனவே வேலை மற்றும் குடும்பத்தை சமநிலைப்படுத்துவது கடினமாக உள்ளது. 14 மணி நேர வேலை அமல்படுத்தப்பட்டால், பல பெண்கள் தொழிலைவிட்டு விலக நேரிடும்."
ஏற்கனவே, பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமல்லாது, சிலர் வார இறுதி நாட்களிலும் வேலை செய்ய ஊழியர்களை கட்டாயப்படுத்துகின்றன. கர்நாடக அரசின் புதிய திருத்தம் வேலை நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்தும் முயற்சி என்பதால், இது ஊழியர்களின் வாழ்க்கையில் பின்வரும் தாக்கங்களை ஏற்படுத்தும். நீண்ட நேரம் வேலை செய்வதால் முதுகு வலி, கண் வலி, குருத்துவலி போன்ற உடல் பிரச்சினைகள் உருவாகும். உடல் இயக்கமின்மை காரணமாக உடல் எடை அதிகரிப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை ஏற்படும். அதிக வேலை நேரம் மன அழுத்தம், கவலை, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். குடும்பத்திற்காக நேரம் செலவிட முடியாததால் தனிமை உணர்வு, உறவுகளில் பிளவு ஏற்படும்.
வேலை மற்றும் குடும்பத்திற்கிடையே சமநிலை காண முடியாததால், பல பெண்கள் தொழிலைவிட்டு விலக நேரிடும்.வேலைக்கு மாற்று இல்லாமல் ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படுவார்கள். திருத்தம் நிறைவேற்றப்பட்டால், 14 மணி நேர வேலை ஒரு சாதாரண நிலையாக மாறும். வேலை தேடும்வர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுத்தப் படுகிறார்கள். கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள வேலை நேர திருத்தம் குறித்தும், தொழிலாளர்கள் எழுப்பிய எதிர்ப்புகளையும் அரசு பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.
தொழிலாளர் சங்கங்கள் தொடர்ந்து அரசை அழுத்தம் கொடுத்து வருகின்றன. வேலை நேரத்திற்கான திருத்தம் மறுபரிசீலனை செய்யப்படும் என அரசு தரப்பில் இருந்து தகவல் வந்துள்ளது. அரசு தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தீர்வை எடுக்க வேண்டும். இந்தப் போராட்டம் ஊழியர்களின் உரிமைக்காக எடுத்த ஒரு முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. வேலை நேரம் அதிகரித்து, ஓய்வு நேரம் குறைகின்ற சூழலில், வேலை-வாழ்க்கை சமநிலையை உறுதி செய்வதற்காக போராட்டங்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.