ARTICLE AD BOX
ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், 2025ம் ஆண்டுக்குள் 14 ஆயிரம் மேலாளர்களை வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
செலவுக் குறைப்பு, திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக இந்த ஆட்குறைப்பு நடப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது. அமேசான் ஆட்குறைப்பு என்பது தனது வேலையாட்களில் 13 சதவீதத்தைக் குறைப்பதாகும், இதன் மூலம் அமேசான் நிறுவனம் ரூ.210 கோடி முதல் ரூ.360 கோடியை சேமிக்க முடியும். இந்தத் திட்டத்தை அமேசான் செயல்படுத்தினால் அந்த நிறுவனத்தின் மேலாளர்கள் எண்ணிக்கை 1.05 லட்சத்திலிருந்து 91,936ஆகக் குறையும் என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
அமேசானின் தகவல்தொடர்பு மற்றும் நிலைத்தன்மைப் பிரிவு ஆகியவற்றில் ஆட்குறைப்பு நடந்தபின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமேசான் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் நிறுவனத்துக்குள் இருக்கும் திறமையின்மை குறித்து ஊழியர்கள் புகாரளிக்க வழி செய்யப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டில் அமேசான் நிறுவனம் தங்களின் மேலாளர்களுக்கு புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, “ ஒவ்வொரு மேலாளரிடம் நேரடியாக ஊழியர்கள் தகவல் அளிப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது, சீனியர் மேலாளர் குறைப்பு, இழப்பீடு முறைகளை ஆய்வு செய்தல் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைகள் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும் லாபத்தை அதிகப்படுத்தவும் உதவுகின்றன. ஏற்கெனவே அமேசான் பல்வேறு திட்டங்களை நிறுத்திவிட்டது, குறிப்பாக “நீங்கள் வாங்குவதற்கு முன் முயற்சிக்கவும்” ஆடைத் திட்டம் மற்றும் விரைவான சேவை போன்ற சில முயற்சிகளை ஏற்கனவே நிறுத்திவிட்டது. அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன்டி ஜேசேவின் திட்டங்களில் முக்கியமானது, முடிவு எடுக்கும் திறனை ஒழுங்குபடுத்தி, திறனை மேம்படுத்துதலாகும்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் சிஇஓ ஜேஸே ஊழியர்களிடம் பேசுகையில் “ 2025 ஜனவரி முதல் ஊழியர்கள் அனைவரும் வாரத்துக்கு 5 நாட்கள் ஊழியர்கள் அலுவலகத்துக்கு வர வேண்டும். அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வதன் மூலம் ஊழியர்கள் அதிகமாகக் கற்றுக்கொள்ளலாம், ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து பணி செய்வதை எளிதாக்கும். மேலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது மூலம் தேவையற்ற அடுக்குகளை நீக்கி, திறமையாக செயல்பட அனுமதிக்கும்” எனத் தெரிவித்தார்.
அமேசான் நிறுவனம் தன்னுடைய ஊழியர்கள் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்துவதன் மூலம், 2025ம் ஆண்டுக்குள் 13,834 மேனேஜர் பணியிடங்கள் குறைக்கப்படும். கொரோனா பரவல் காலத்தில் அமேசான் வேலைக்கு ஆட்களை சேர்ப்பது அதிகரித்து, 2019ல் 7.98 லட்சமாக இருந்தநிலைியல் 2021ல் 16 லட்சமாக உயர்ந்தது. 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் நிர்வாக ரீதியாகவும், வசதிக்காகவும் 27ஆயிரம் பேரை வேலையிருந்து நீக்கியுள்ளது என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் நாளேடு தெரிவித்துள்ளது.