11 ரூபாய் இருந்தாலே போதும்.. ஆண்டு முழுக்க ஜாலியாக வியட்நாம் பறக்கலாம்.. புக் செய்வது எப்படி?

3 hours ago
ARTICLE AD BOX

11 ரூபாய் இருந்தாலே போதும்.. ஆண்டு முழுக்க ஜாலியாக வியட்நாம் பறக்கலாம்.. புக் செய்வது எப்படி?

Tour
oi-Vigneshkumar
Subscribe to Oneindia Tamil

மும்பை: சர்வதேச சுற்றுலா இப்போது மக்களிடையே பிரபலமடைந்து வரும் சூழலில், வியட்நாம் செல்ல அட்டகாசமான ஒரு ஆஃபர் வந்துள்ளது. வியட்நாம் நகருக்கு வெறும் ரூ.11 டிக்கெட்டில் விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் சுற்றுலா செல்ல மிக ஏற்ற திட்டமாக இருக்கும் இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்

இந்த காலத்தில் சர்வதேச சுற்றுலா என்பது மக்களிடையே வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. புது கலாச்சாரம், உணவு ஆகியவற்றை அனுபவிக்க மக்கள் புதிய நாடுகளுக்குச் செல்ல ஆர்வமாக இருக்கிறார்கள். இதன் காரணமாகவே சர்வதேச சுற்றுலா வேகமாக அதிகரித்து வருகிறது. அதேநேரம் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வோருக்கு உள்ள பெரிய சிக்கலே விமான டிக்கெட்கள் தான்.

travel flight world

விமான டிக்கெட்

மற்ற செலவுகள் கூட இவ்வளவு தான் ஆகும் என்பது சுமாராக தெரியும். ஆனால், விமான டிக்கெட் செலவை மட்டும் அப்படி துல்லியமாகக் கணக்கிடவே முடியாது. மேலும், அது கணிசமான தொகை என்பது நமது பர்ஸ்ஸையும் பதம் பார்த்துவிடும். இதனால் குறைவான ரேட்டிற்கு விமான டிக்கெட் புக் செய்வதே கூட ஒரு சவாலான பணியாகவே இருக்கிறது.

வெறும் 11 ரூபாய்

ஆனால், இனி வியட்நாம் செல்வோருக்கு இந்தப் பிரச்சினை இருக்காது. குறைந்தபட்சம் தற்காலிகமாக இருக்காது. ஏனென்றால், அந்நாட்டைச் சேர்ந்த வியட்ஜெட் ஏர் நீங்ககள் நம்பவே முடியாத ஆஃபரை அள்ளி வழங்குகிறது. இந்தியாவில் இருந்து வெறும் 11 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிமுகம் செய்துள்ளது. 11 ரூபாய்க்கான டிக்கெட் சில நகரங்களில் இருந்து மட்டுமே இருக்கிறது. அதுவும் குறைந்தபட்ச டிக்கெட் மட்டுமே இந்த சலுகை விலையில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த ரேட்டில் டிக்கெட்கள் விற்பனைக்கு வருகிறது.

விமானம் புறப்படும் போது.. செல்போனை ஏரோபிளேன் மோடில் போடவில்லை என்றால் என்ன நடக்கும்? இவ்வளவு இருக்கா
விமானம் புறப்படும் போது.. செல்போனை ஏரோபிளேன் மோடில் போடவில்லை என்றால் என்ன நடக்கும்? இவ்வளவு இருக்கா

குறைவு தான்

அதேநேரம் மற்ற ரூட்களில் மற்ற விமான நிலையங்களைக் காட்டிலும் கூட அதன் விலை குறைவாகவே இருக்கிறது. மேலும், இது அடிப்படை கட்டணம் மட்டும் தான். இதற்கு மேல் சர்சார்ஜ், வரி எல்லாம் இருக்கும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது சில ஆயிரம் வரை கட்ட வேண்டி இருக்கும். ஆனாலும், ஒட்டுமொத்த கட்டணத்தைச் சேர்த்துப் பார்த்தாலும் அது வழக்கமான கட்டணத்தை விடக் குறைந்தபட்சம் 50% வரை குறைவாகவே இருக்கிறது.

ஈக்கோ (eco) என்ற பிரிவில் குறைந்தபட்ச தொகைக்கு டிக்கெட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமே நம்மால் மிகக் குறைந்த விலைக்குப் பறக்க முடியும். அதேநேரம் இதில் ஒருவரால் அதிகபட்சம் 7 கிலோ வரை மட்டுமே லக்கேஜ் எடுத்துச் செல்ல முடியும். கூடுதல் லக்கேஜ் தேவை என்றால் அதற்குத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.

எவ்வளவ நாள் சலுகை இருக்கு

மேலும், சும்மா ஓரிரு நாட்கள் பெயருக்கு மட்டும் இந்த சலுகையை அவர்கள் அறிமுகப்படுத்தவில்லை. வரும் டிசம்பர் 31ம் தேதி வரை இந்த சலுகை இருக்கிறதாம். அதேநேரம் விடுமுறை நாட்கள் மற்றும் ஹாலிடே சீசன்களில் மட்டும் இந்த சலுகை செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்தச் சலுகையைப் பெற, பயணிகள் வியட்ஜெட் ஏர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது மொபைல் செயலி மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்ய வேண்டும்.

"சீட் இருக்கு.. விண்டோ எங்கே?" தமிழ் பிரபலத்திற்கு அதிர்ச்சி கொடுத்த இண்டிகோ விமானம்! கலகல சம்பவம்

கட்டுப்பாடுகள் இருக்கா?

அதேநேரம் குறைந்தபட்ச ரேட்டான 11 ரூபாய்க்கு டிக்கெட் புக் செய்யும் போது சில கட்டுப்பாடுகள் உள்ளன. உதாரணமாக ஒரு முறை டிக்கெட் புக் செய்துவிட்டால் அவ்வளவு தான் அதன் பிறகு அதை மாற்றவே முடியாது. எனவே, பயணத்தைக் கவனமாகத் திட்டமிட்டு அதன் பிறகு டிக்கெட் புக் செய்யுங்கள். மேலும், டிக்கெட்டை ரத்து செய்யும் ஆப்ஷன் இல்லை. பயணத்தின் போது உணவு உட்பட இதர வசதிகள் வேண்டும் என்றால் அதற்கு நாம் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

More From
Prev
Next
English summary
Leading airline Vietjet Air is offering flights from India to Vietnam starting at an unbelievable ₹11 (வியட்ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கலக்கல் ஆஃபர்): All things to know about Vietjet Air cheap flight tickets.
Read Entire Article