104 குழந்தைகள், 144 பேரப்பிள்ளைகள், 20 மனைவிகள்-யாரு ராசா நீ? வைரல் செய்தி!

4 hours ago
ARTICLE AD BOX

Viral News Tanzania Man Who Has 20 Wives : 1 குழந்தை, 1 மனைவி வைத்திருக்கும் ஆண்களே “ஐயோ இந்த குடும்பத்தை எப்படி சமாளிப்பது” என மண்டையை பிய்த்துக்கொள்வதை பார்த்திருப்போம். 50 வருடங்களுக்கு முன்பு, நம் ஊரில் 13-14 குழந்தைகள் பெற்ற பாட்டிகள் எல்லாம் உள்ளனர். இப்போது, இந்தியாவிலேயே அப்படிப்பட்ட நிகழ்வுகள் அரிதாகி விட்டன. பெண்கள், உஷாராக ஆரம்பித்ததால் 1 குழந்தை அல்லது நோ குழந்தை எனும் நிலைக்கு வந்து விட்டனர். இதற்கு கணவன்மார்களும் மறுப்பு சொல்வதில்லை. ஆனால், இங்கு ஒரு நபர், 20 மனைவிகள், 104 குழந்தைகள், 144 பேரப்பிள்ளைகள் என ஒரு மினி கிராமத்தையே தன் வீட்டில் வைத்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

யார் அவர்?

அந்த நபர் கிழக்கு ஆப்ரிக்காவில் இருக்கும் டான்சானியா எனும் இடத்தில் வாழ்ந்து வருகிறார். இவரது பெயர், Mzee Ernesto Muinuchi Kapinga. பெயரே வித்தியாசமாக இருப்பது போல, ஆளும் கொஞ்சம் வித்தியாசமான ஆள்தான். 

இவருக்கு 1961ஆம் ஆண்டில் முதல் திருமணம் நடந்துள்ளது, அந்த ஆண்டிலேயே முதல் குழந்தையும் பிறந்துள்ளது. இதை பார்த்த இவரது தந்தை, “இன்னும் கல்யாணம் பண்ணிக்கோடா மகனே” என்று கூறி அதற்கான செலவுகளுக்கும் கூட உதவுவதாக கூறியிருக்கிறார்.

“அப்பாவே சொல்லிட்டாரே..அப்போ ஓகே” என்று யோசித்த Ernesto, அதன் பிறகு வரிசையாக திருமணம் செய்வதை மட்டும் தொழிலாக வைத்திருக்கிறார். இந்த நபரின் தந்தை 5 திருமண செலவுகளை தானே ஏற்றுக்கொண்டுள்ளார். அதன் பிறகான திருமண செலவுகளை Ernesto-வே பார்த்துக்கொண்டாராம். 

மனைவிகள் இறப்பு:

சமீபத்தில் Ernesto ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், தான் இத்தனை பேரை திருமணம் செய்து கொண்டது எப்படி, இவர்களுடனான உறவு இப்போது எப்படி இருக்கிறது என்பது குறித்தும் பேசியிருக்கிறார். இவரது 20 மனைவிகளில் 4 பேர் உயிரிழந்து விட்டனர். இப்போது 16 மனைவிகளுடனும், 104 பேரக்குழந்தைகளுடனும்,  144 பேரக்குழந்தைகளுடனும் வாழ்ந்து வருகிறாராம்.

இவரது 20 மனைவிகளுள், 7 பேர் அக்காள் தங்கையாம். Ernesto-வை திருமணம் செய்த ஒரு சகோதரி, தனது கணவர் குறித்து பெருமையாக பேச, அதே போன்ற வாழ்க்கை தங்களுக்கும் வேண்டும் என நினைத்த பிறரும் அவரை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் வீட்டில் ஏதேனும் விஷேஷம் நடக்கிறது என்றால், அது பார்ப்பதற்கே திருவிழா போல இருக்குமாம். ஒவ்வொரு மனைவிக்கும் தனித்தனியாக வீடு கட்டிக்கொடுத்திருக்கிறார் Ernesto. அவர்களுக்கும் தோட்டம், நிலம் என அனைத்தும் இருக்கிறது. இவர்கள் ஒன்றாக வேலை செய்து, ஒன்றாக சாப்பிட்வார்களாம்.

ஒரு சண்டையும் வராதாம்..

என்னதான் 20 மனைவிகள், இத்தனை குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் என இருந்தாலும், Ernesto அனைவர் மீதும் ஒரே மாதிரிதான் பாசம் வைத்துள்ளாராம். இவர்களின் வீடு, ஒரு பெரிய சமூக கட்டமைப்பு போல இயங்கி வருகிறதாம். இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள், Ernesto வெளியில் சென்றிருந்தால், அவர் வீட்டிற்கு வந்த பின்னர்தான் ஓய்வெடுப்பார்களாம்.

மேலும் படிக்க | முதலிரவு முடிந்த அடுத்த நாளே... குழந்தையை பெற்ற மணப்பெண் - ஷாக்கில் மாப்பிள்ளை!

மேலும் படிக்க | 84 வருட திருமண வாழ்க்கை-100 பேரக்குழந்தைகள்!! சாதனை புரிந்த தம்பதி-வைரல் செய்தி..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article