ARTICLE AD BOX
2025 18வது ஐபிஎல் சீசனில் தனது சிஎஸ்கே பிளேயிங் லெவன் எதுவென அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு கூறியிருக்கிறார். இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு முக்கிய வீரரை அவர் கழட்டி விட்டிருக்கிறார்.
இந்த முறை மெகா ஏலத்தில் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக சிஎஸ்கே அணி நிர்வாகம் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நூர் அகமது என 2 சுழல் பந்துவீச்சாளர்களுக்காக 20 கோடி ரூபாய் செலவிட்டு இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் நினைத்த சில வீரர்களை வாங்க முடியாமல் போயிருக்கிறது.
சிஎஸ்கே அணியின் பிரச்சனை
தற்போது சிஎஸ்கே அணியில் வெளிநாட்டு வீரராக பதிரனா மற்றும் கான்வே இருவரும் உறுதியாக விளையாடுவார்கள். மூன்றாவது வெளிநாட்டு வீரராக பேட்டிங் வரிசையை பலப்படுத்துவதற்கு ரச்சின் ரவீந்தரா விளையாட வேண்டிய தேவை இருக்கிறது. அவர் தற்போது நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடர் நாயகன் விருது வென்று இருக்கிறார்.
இந்த நிலையில் நான்காவது வெளிநாட்டு வீரர் யார் என்பதில் தான் பெரிய சிக்கல் நிலவுகிறது. இந்த இடத்திற்கு 10 கோடி கொடுத்து வாங்கப்பட்ட நூர் அகமதுவை விளையாட வைக்க வேண்டும். அப்படி அவரை விளையாட வைக்கும் பொழுது புதிய பந்தில் பந்து வீசுவதற்கு வேத பந்துவீச்சாளர் ஒருவர் இல்லாமல் போகக்கூடிய சூழ்நிலை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் இருக்கிறது. இதன் காரணமாக அவருடைய இடத்திற்கு புதிய பந்தில் வீசக்கூடிய ஆல்ரவுண்டர் சாம் கரனை விளையாட வேண்டி இருக்கிறது.
அம்பதி ராயுடு வெளியிட்டிருக்கும் பிளேயிங் லெவன்
இந்த நிலையில் அம்பதி ராயுடு இது குறித்து பேசும் பொழுது ” தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே, ருத்ராஜ் இருக்க வேண்டும். இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ரச்சின் ரவீந்தரா, நான்காவது இடத்தில் தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி இல்லை விஜய் சங்கர் மூவரில் யார் வேண்டுமானாலும் விளையாடலாம். ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் சிவம் துபே மற்றும் ஜடேஜா விளையாட வேண்டும்”
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. ராஜஸ்தான் அணிக்கு பெரிய பின்னடைவு.. சஞ்சு சாம்சன் தொடர்பாக வெளியான அப்டேட்.. சோகத்தில் ரசிகர்கள்
“இதற்கு அடுத்து ஏழாவது இடத்தில் தோனி எட்டாவது இடத்தில் சாம் கரன். இதைத்தொடர்ந்து அஸ்வின், அன்சூல் காம்போஜ் மற்றும் பதிரனா இருப்பார்கள். இம்பேக்ட் பிளேயரை பொருத்தவரையில் தேவைக்கு தகுந்த மாதிரி ஒரு வேகப்பந்துவீச்சாளரையோ ஒரு சுழல் பந்துவீச்சாளரையோ எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார்.
The post 10 கோடி வீரர் நோ.. அம்பதி ராயுடு அறிவித்த வேற லெவல் சிஎஸ்கே பிளேயிங் XI.. ரசிகர்கள் ஆச்சரியம் appeared first on SwagsportsTamil.