ARTICLE AD BOX

பொதுவாக வாடிக்கையாளர்கள் தங்களுடைய கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்து நீண்ட நாட்களுக்கு பிறகு அதை அதிக வருமானமாக மாற்றுவதற்காக பணத்தை பல்வேறு திட்டங்களில் சேமித்து வருகிறார்கள். இதற்கு லாபகரமான வட்டியும் கிடைக்கிறது. ஆரம்பத்தில் உங்களுடைய முதலீட்டில் வளர்ச்சி அளவு சிறியதாக இருக்கும். ஆனால் வருடங்கள் ஆன பிறகு அதன் மதிப்பானது அதிகரித்துக் கொண்டே தான் செல்லும். வருடங்கள் செல்ல செல்ல உங்களுடைய கார்பஸும் பெரிதாக வளரும். டிஎஸ்பி மிட்கேப் பண்டில் ஒரு வருடத்திற்கு முன்பு முதலீடு செய்திருந்தால் அது இப்பொழுது 1.44 லட்சமாக இருந்திருக்கும்.
மேலும் 44.2% வருமானமும் இதில் கிடைக்கும். மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு லட்சம் முதலீடு செய்தால் 1.67 லட்சம் அதிகரித்து 18.79 சதவீதம் வருமானம் இதில் கிடைத்திருக்கும். பத்து வருடத்திற்கு முன்பு முதலீடு செய்திருந்தால் இந்த பணத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்திருக்கும் பொழுது தற்போது 5. 16 லட்சம் கிடைக்கும். ஆரம்பத்தில் ஒரு லட்சத்து முதலீடு செய்திருந்தால் இந்த தொகை 15 மடங்கு அதிகரித்து ஆகஸ்ட் 30 2024 நிலவரப்படி 15.1 லட்சம் ஆக அதிகரித்திருக்கும்.