1.34 நிமிட குட் பேட் அக்லி டீசர்..! எத்தனை மணிக்கு தெரியுமா?

3 hours ago
ARTICLE AD BOX

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி டீசர் தேதி, நேரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார்.

அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். தமிழ் புத்தாண்டு வெளியாக ஏப். 10 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இதனால், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகவுள்ளன.

சில நாள்களுக்கு முன் நடிகை த்ரிஷா ‘ரம்யா’ என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக விடியோ வெளியிட்டு அறிவித்தனர்.

பிப். 25ஆம் தேதி குட் பேட் அக்லி படத்தின் டீசர் வருகிற பிப். 28 ஆம் தேதி வெளியாகும் என புரோமோ வெளியானது.

அந்த புரோமோவில் அஜித் இரு வெவ்வேறு தோற்றங்களில் வருவதும் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் ரசிகர்களிடம் பெரிதாக வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் நாளை (பிப்.28) மாலை 7.03 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 1 நிமிடம் 34 நிமிடம் டீசர் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#GoodBadUglyTeaser Tomorrow at 7.03pm ❤️ #AjithKumar sir @MythriOfficial @SureshChandraa sir ❤️ pic.twitter.com/P7woUkg22E

— Adhik Ravichandran (@Adhikravi) February 27, 2025
Read Entire Article