1,100 பேரை பணி நீக்கம் செய்த ஜியோஸ்டார்!. ஜூன் வரை தொடரும்!. ஊழியர்கள் அதிர்ச்சி!

2 days ago
ARTICLE AD BOX

JioStar: வியாகாம்18 மற்றும் டிஸ்னி நிறுவனங்களின் இணைப்பின் பின்னர், ஜியோஸ்டார் நிறுவனத்தில் 1,100 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 2024 Viacom18 மற்றும் டிஸ்னியின் ஸ்டார் இந்தியா ஆகியவை இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான JioStar-ஐ உருவாக்கியுள்ளன. புதிய நிறுவனம் செயல்திறனை மேம்படுத்துவதையும், குறிப்பாக விளையாட்டு மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் துறைகளில் கவனம் செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தநிலையில், தேவையற்ற பணிகளை குறைக்கும் முயற்சியாக, 1,100-க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியதாகக் கூறப்படும் இந்த பணிநீக்கங்கள், ஜூன் 2025 வரை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆட்குறைப்பு முக்கியமாக செயல்பாடுகளை ஒழுங்கமைக்கும் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு குறைப்புகள் முக்கியமாக விநியோகம், நிதி, வர்த்தக மற்றும் சட்ட துறைகளில் உள்ள நிறுவன நிலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. “இரு பெரிய நிறுவனங்கள் ஒரே போன்ற வணிகங்களை இணைக்கும் போது, பணிநீக்கங்கள் தவிர்க்க முடியாது என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பணிநீக்க அறிவிப்பால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள், நிறுவனத்தில் எவ்வளவு காலம் பணியாற்றினார்கள் என்பதைப் பொறுத்து ஆறு முதல் 12 மாதங்கள் வரை சம்பளம் பெறுவார்கள் என்றும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிறைவு செய்யப்பட்ட ஒவ்வொரு வருடத்திற்கும், ஊழியர்களுக்கு ஒரு மாத முழு சம்பளமும், ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை அறிவிப்பு காலமும் வழங்கப்படும்.

ரூ. 70,352 கோடி மதிப்புள்ள ஜியோஸ்டார் நிறுவனம், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களுடன் போட்டியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் அதன் தொலைக்காட்சி வணிகத்தை வலுப்படுத்துகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வியாகாம் 18 மற்றும் நேரடி உரிமை மூலம் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கிறது, அதே நேரத்தில் டிஸ்னி 36.84 சதவீதத்தை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Readmore: நோட்…! நாளை காலை 10 மணி முதல் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்…!

The post 1,100 பேரை பணி நீக்கம் செய்த ஜியோஸ்டார்!. ஜூன் வரை தொடரும்!. ஊழியர்கள் அதிர்ச்சி! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article