ARTICLE AD BOX
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா தி ரூல். இப்படத்தில் அல்லு அர்ஜுன் ஹிரோவாக நடித்தார். அவருடன் ராஷ்மிக்கா மந்தனா, பகத் பாசில், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் நல்ல வரவேற்பு காரணமாக படத்திற்கான இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இச்சூழலில் சரியாக 3 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா தி ரைஸ் கடந்த நவம்பரில் வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
அதேசமயம் விமர்சனம் ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் இப்படம் ரூ.1500 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது. இதன் மூலம் இந்திய சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தது.
மேலும் படிங்க: மலையாள நடிகர் ஓபன் டாக்.. அட்லீயை வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. அப்படி என்ன சொன்னார்?
இந்நிலையில், புஷ்பா 3 படத்திற்கான அப்டேட்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அது தொடர்பான அறிவிப்பை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ரவிசங்கர் வெளியிட்டு இருக்கிறார். அதாவது, புஷ்பா 3 படத்திற்கான பணிகள் 2028ல் தொடங்கும்.
இதற்கிடையில், நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லியின் படத்திலும், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த 2 படங்களும் முடிவடையவே ஏறத்தாழ 3 ஆண்டுகள் ஆகிவிடும். அதன் பிறகே புஷ்பா 3 படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: “நாங்கள் இன்னும் கணவன்-மனைவிதான்!” வைரலாகும் சாய்ரா பானுவின் பதிவு..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ