'பட்ஜெட்டும் ஹிட்... தமிழும் ஹிட்...' லோகோவில் 'ரூ' போட்டது ஏன்? ஸ்டாலின் விளக்கம்

14 hours ago
ARTICLE AD BOX

MK Stalin Ungalil Oruvan Video: 'உங்களில் ஒருவன்' என்ற தலைப்பில் மக்களிடம் எழும் கேள்விகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில் அவ்வப்போது வீடியோ வெளியிடப்படும்.

அந்த வகையில், தற்போது தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு, பட்ஜெட் குறித்த மக்களின் கேள்விகளுக்கு விடையளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிய 'உங்களில் ஒருவன்' வீடியோ இன்று வெளியிடப்பட்டது.

MK Stalin News: பட்ஜெட்டை பாராட்டிய நிபுணர்கள், நாளேடுகள்

இந்த வீடியோவில் முதலமைச்சர் ஸ்டாலின் பட்ஜெட் குறித்து பல்வேறு புதிய விளக்கங்களை அளித்தது மட்டுமின்றி, பட்ஜெட்டுக்கு பின் தனது அடுத்த கட்ட திட்டம் என்ன என்பதையும் வெளிப்படுத்தி உள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் மற்றும் பொருளாதார ஆய்வறிக்கை ஆகியவை குறித்து பல்வேறு ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளேடுகள் பாராட்டி செய்தி வெளியிட்டிருப்பதை முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிகாட்டினார். மேலும், தேசியளவில் கவனம் ஈர்த்த பட்ஜெட் குறித்து பல்வேறு பொருளாதார நிபுணர்களும் பாராட்டி கருத்து தெரிவித்திருப்பதாக ஸ்டாலின் கூறியிருந்தார். நிபுணர்கள் பேசிய வீடியோக்களையும் அதில் இணைத்திருந்தார்.

MK Stalin: நெட்டிசன்களில் கருத்தை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் இந்த பட்ஜெட் குறித்து மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதையும் ஸ்டாலின் இந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இதனை எடுத்துக்காட்டும் விதமாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்களில் பதிவுகளையும், திட்டங்களை பாராட்டி சிலர் பேசிய வீடியோக்களையும் அதில் இணைத்திருந்தனர். தாயுமானவர் திட்டம், அன்புச்சோலை திட்டம், ஊர்காவல் படையில் திருநங்கைகளை சேர்ப்பதற்கான திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தீட்ட காரணமாக இருந்தவை குறித்தும் முதல்வர் இந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

MK Stalin: ரூ என வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

குறிப்பாக, முதல் கேள்வியே பட்ஜெட் லோகோவை பற்றிதான் இருந்தது. அதாவது,"பட்ஜெட்டுக்கு முன்னாடி நீங்க போட்ட ட்வீட்டே நேசனல் நியூஸ் ஆகிடுச்சே?" என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,"பட்ஜெட் லோகோவை வெளியிட்டிருந்தேன். மொழிக் கொள்கையில் எந்தளவிற்கு உறுதியாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கவே அந்த லோகோவில் 'ரூ' என வைத்திருந்தோம். தமிழை பிடிக்காதவர்கள் பெரிய செய்தியாகிவிட்டார்கள்.

‘ரூ’ என்பது பெரிதானது ஏன்?#TNBudget2025-இல் எல்லாத் திட்டங்களும் எனக்கு நெருக்கமானவைதான் என்றாலும்; சில திட்டங்களை உருவாக்கியது எப்படி என்று பகிர்ந்துகொள்கிறேன்!#UngalilOruvanAnswers pic.twitter.com/oTl0Kcypq3

— M.K.Stalin (@mkstalin) March 16, 2025

MK Stalin: 'பட்ஜெட்டும் ஹிட், தமிழும் ஹிட்'

நாங்கள் ஒன்றிய அரசிடம் 100 நாள் வேலைத்திட்டத்திற்கான சம்பளத்தை தாருங்கள், பேரிடர் நிதியை தாருங்கள், பள்ளிக்கல்வி நிதியை விடுவியுங்கள் என தமிழ்நாடு சார்பில் 100 கோரிக்கைகளை வைத்திருப்போன். அப்போதெல்லாம் எதுவும் பேசாத ஒன்றிய நிதி அமைச்சர், இதை பற்றி பேசியிருக்கிறார். அவரும் (நிர்மலா சீதாராமன்) பல பதிவுகளில் 'ரூ' என்றே பயன்படுத்தி உள்ளார். ஆங்கிலத்திலும் பலரும் Rupees என்பதை சுருக்கமாக 'Rs' என்றே குறிப்பிடுவார்கள். அதெல்லாம் அவர்களுக்கு பிரச்னையாக தெரியவில்லை, இதுதான் பிரச்னையாக தெரிகிறது போல... மொத்தத்தில் இந்தியா முழுவதும் தமிழ்நாட்டின் பட்ஜெட்டும் ஹிட்டு, தமிழும் ஹிட்டு" என பேசினார்.

MK Stalin: பட்ஜெட் தயாரிப்பு பணிகள்

மேலும், பட்ஜெட் தயாரிப்பு குறித்து பேசிய ஸ்டாலின்,"முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், நாராயணன், ஜீன் டிரேஸ் உள்ளிட்டோர் பல ஆலோசனைகளை வழங்கினார்கள். அடித்தட்டு மக்களிடமும் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தோம்.

மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் மக்களிடம் போய் சேர்ந்த திட்டங்கள் என்ன என்பதையும் கண்டறிந்து, அதனை தமிழ்நாட்டிற்கு ஏற்ப மாற்றி கொண்டு வர வேண்டும் என முடிவெடுத்தோம். இதற்காக பல நாள்கள் தலைமை செயலகத்தில் மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணிவரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுதான் இந்த பட்ஜெட்டை தயாரித்தோம்" என கூறியிருந்தார்.

மேலும் படிக்க | வாடகை வீட்டில் இருப்பவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்குவது எப்படி?

மேலும் படிக்க | 7783 காலியிடங்கள்! அங்கன்வாடி பணியாளர்கள் வேலை வாய்ப்பு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

மேலும் படிக்க | எங்கே? எப்பொழுது? குறை தீர்க்கும் நாள் குறித்து ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article