ARTICLE AD BOX
வேற எந்த போனும் வேணாம்.. ரூ.6299-க்கு 3 வருஷம் வாரண்டி, 6GB ரேம், IP54 ரேட்டிங், 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரூ.10,000 பட்ஜெட்டே கொஞ்சம் அதிகம் தான் பா.. இன்னும் கொஞ்சம் இறங்கி வந்து ரூ.6000 பட்ஜெட்டில் ஏதாவது ஒரு நல்ல ஸ்மார்ட்போன் இருந்தா.. சொல்லுங்களேன் என்பவரா நீங்கள்? ஆம் என்றால்.. கவலையை விடுங்கள். நீங்கள் சரியான நேரத்தில், சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.
ஏனென்றால்.. 3 வருஷம் லேக் ப்ரீ பெர்ஃபார்மன்ஸ் வாரண்டி (3 Years Lag Free Performance Warranty), 6ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம், ஐபி54 ரேட்டிங், 5000எம்ஏஎச் பேட்டரி உட்பட பல முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய ஒரு ஸ்மார்ட்போன், அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில் ரூ.6,299 என்கிற ஆபர் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அது டெக்னோ பாப் 9 4ஜி (Tecno POP 9 4G) ஸ்மார்ட்போன் ஆகும.

தற்போது அமேசான் வலைத்தளத்தில், டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 3ஜிபி ரேம் +64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.8,499 க்கு பதிலாக 26% நேரடி தள்ளுபடிக்கு பின் ரூ.6,299 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த தள்ளுபடி டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போனின் 3 கலர் ஆப்ஷன்களின் (கிளிட்டரி ஒயிட், லைம் கிரீன் மற்றும் ஸ்டார்ட்ரெயில் பிளாக்) மீதும் கிடைக்கிறது
டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 720 x 1,600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 480 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 263 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 20:09 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடனான 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது 12 என்எம் மீடியாடெக் ஹீலியோ ஜி50 சிப்செட்டை (12nm MediaTek Helio G50 chipset) கொண்டுள்ளது. இந்த சிப்செட் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டார்ஜ் உடன் இணைக்கப்பட்டு உள்ளது. இது கூடுதலாக 3ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் விரிவாக்கத்தையும் (Virtual RAM expansion) ஆதரிக்கிறது. இதன் மூலம் டெக்னோ பாப் 9 4ஜி ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 6ஜிபி ஆக எக்ஸ்டெண்ட் செய்ய முடியும்.
ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைஓஎஸ் 14 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் (HiOS 14 out-of-the-box) மூலம் இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை இதில் 4எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (4x digital zoom) மற்றும் 1080பி வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு (1080p video recording support) கொண்ட 13 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா யூனிட் உள்ளது. முன் கேமராவில் 8 மெகாபிக்சல் சென்சார் உள்ளது, இது 1080பி வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது.
பேட்டரியை பொறுத்தவரை இது யூஎஸ்பி டைப்-சி போர்ட் வழியாக 15W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது டிடிஎஸ் ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் யூனிட்டை (DTS-backed dual stereo speaker unit) கொண்டுள்ளது. மேலும் ஐஆர் ரிமோட் கண்ட்ரோலுக்கான (IR remote control) ஆதரவு, தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் (IP54 Rating)கொண்டுள்ளது
ஒருவேளை உங்களுக்கு 5ஜி ஆதரவுடன் வரும் ஸ்மார்ட்போன் தேவை என்றால், இதே ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட்-ஐ வாங்கலாம். அது டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இதுவும் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 21% நேரடி தள்ளுபடியை பெற்று, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.11,999 க்கு பதிலாக ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கிறது.