ARTICLE AD BOX
வெளுத்துக் கட்டும் அமேசான்.. டால்பி அட்மாஸ்.. 7500mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. ஆஃபரில் 5ஜி டேப்லெட்..
லெனோவா டேப் பி11 5ஜி (Lenovo Tab P11 5G) மாடல் ஆனது அமேசான் (amazon) தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த லெனோவா டேப்லெட் ஆனது 2கே டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட், டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது லெனோவா டேப் பி11 5ஜி மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது லெனோவா டேப் பி11 5ஜி மாடலுக்கு அமேசான் தளத்தில் 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த லெனோவா டேப்லெட் மாடலை ரூ.17,999 விலையில் வாங்கிவிட முடியும்.

லெனோவா டேப் பி11 5ஜி அம்சங்கள் (Lenovo Tab P11 5G Specifications): 11-இன்ச் 2கே டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது லெனோவா டேப் பி11 5ஜி மாடல். பின்பு 2000x1200 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், டால்பி விஷன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த 5ஜி டேப்லெட். குறிப்பாக இந்த டேப்லெட் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி (Qualcomm Snapdragon 750G) சிப்செட் சிப்செட் உடன் Adreno 619 GPU ஆதரவைக் கொண்டு இந்த லெனோவா டேப் பி11 5ஜி மாடல் வெளிவந்துள்ளது. இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த டேப்லெட் மாடலுக்கு கிடைக்கும்.
குறிப்பாக டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவுடன் JBL ஸ்பீக்கர் வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் பி11 5ஜி மாடல். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். குறிப்பாகத் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு கொண்டு வெளிவந்துள்ளது லெனோவா டேப் மாடல். மேலும் இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
புதிய லெனோவா டேப் பி11 5ஜி மாடல் ஆனது 13எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி கேமாவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் ஃபேஸ் அன்லாக் செய்ய ToF சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் பி11 5ஜி மாடல்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் பி11 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
அதேபோல் 7500mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் பி11 5ஜி மாடல். மேலும் 20W QC 3.0 பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். எனவே இந்த டேப்லெட் மாடலை விரைவாக சார்ஜ் செய்ய முடியும். 5ஜி, 4ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் பி11 5ஜி மாடல்.