ARTICLE AD BOX
விஸ்வரூப விற்பனை.. ரூ.22,999 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
மிட்-பிரீமியம் பட்ஜெட்டில் கிடைக்கும் அண்டர் வாட்டர் கேமரா சிஸ்டம், 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, டைமன்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட் மற்றும் 6000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை பட்ஜெட்டில் கொடுக்கும் ரியல்மி 14 ப்ரோ 5ஜி (Realme 14 Pro 5G) போனானது இப்போது டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது. பீச்சர்கள் மட்டுமல்லாமல், டிசைனிலும் பிரீமியம் லுக் கொடுக்கும் இந்த ரியல்மி போனுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) கிடைக்கும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.
ரியல்மி 14 ப்ரோ 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (Realme 14 Pro 5G Flipkart Sale): இந்த ரியல்மியின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்தால் ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக வாங்கி கொள்ளலாம். இதுபோக ரூ.13,300 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது.

ஆகவே, ரூ.22,999 பட்ஜெட்டில் வருகிறது. இந்த பேங்க் டிஸ்கவுண்ட்டை பெறுவதற்கு ஆக்சிஸ் பேங்க், எஸ்பிஐ பேங்க் மற்றும் எச்டிஎப்சி பேங்க் போன்றவற்றின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம். இதே ரூ.2,000 டிஸ்கவுண்ட் மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம். எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் கிரெடிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
ரியல்மி 14 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme 14 Pro 5G Specifications): இந்த ரியல்மியின் டிசைனே மிரளவிடும்படி இருக்கிறது. ஏனென்றால், கலர்-சேஞ்ச் பேனல் மற்றும் டிரிபிள் ரியர் ஃபிளாஷ் சப்போர்ட் கிடைக்கிறது. மிலிட்டரி கிரேட் ஷாக் ரெசிஸ்டன்ட் மற்றும் டியூவி ரெயின்லேண்ட் ரக்கட் ஸ்மார்ட்போன் சர்டிபிகேஷன் பெற்றுள்ளது. இதுபோக IP69 வாட்டர்ப்ரூஃப் கொடுக்கிறது.
மேலும், IP66 டஸ்ட் ரெசிஸ்டன்ட் மற்றும் IP68 ஃபிரஷ் வாட்டர் ரெசிஸ்டன்ட் பேக் செய்துள்ளது. ஆகவே, அண்டர் வாட்டர் போட்டோகிராபி மற்றும் நைட்போட்டோகிராபியில் பிரீமியம் போன்களுக்கு நிகரான அவுட்புட் எதிர்பார்க்கலாம். அதேபோல பிரீமியம் குவாலிட்டி மற்றும் டியூரபிலிட்டியும் எதிர்பார்க்கலாம். இதே போலவே டிஸ்பிளே பீச்சர்களும் இருக்கின்றன.
ஆகவே, ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷனுடன் 6.83 இன்ச் (2392 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் பிரீமியம் அவுட்டோர் அவுட்புட் கொடுக்க 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மட்டுமல்லாமல், ஏஐ ஐ பாதுகாப்பு (AI Eye Protection) கொடுக்கிறது.
மேலும், வழக்கமான 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி டைமன்சிட்டி 7300 எனர்ஜி 5ஜி (Dimensity 7300 Energy 5G) சிப்செட் மற்றும் ஏஐ பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் மாலி ஜி615 ஜிபியு கிராபிக்ஸ் உள்ளது.
அண்டர் வாட்டர் கேமரா சப்போர்ட் மட்டுமல்லாமல், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேலும் 2 எம்பி செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஈஐஎஸ் (EIS) உள்ளது.
16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே கிடைத்திருந்தும், கேமிங் பிரியர்களுக்கு பக்கா பேக்கப் கொடுக்கும்படி 6000mAh பேட்டரி பேக் செய்துள்ளது. இந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. கம்மியான ஃபாஸ்ட் சார்ஜிங் வந்தாலும், விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) இருக்கிறது. ஒயிட், பிங்க் மற்றும் கிரே கலர்களில் ஆர்டர் செய்யலாம்.