விகிதாச்சாரத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி வரையறை: பொன்.குமார் வலியுறுத்தல்

10 hours ago
ARTICLE AD BOX

Published : 19 Mar 2025 05:57 AM
Last Updated : 19 Mar 2025 05:57 AM

விகிதாச்சாரத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி வரையறை: பொன்.குமார் வலியுறுத்தல்

தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி மற்றும் தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் பொன்குமார் உரையாற்றினார். உடன் நிர்வாகிகள். | படம்: ம.பிரபு |
<?php // } ?>

சென்னை: தமிழ்​நாடு விவ​சா​யிகள் - தொழிலா​ளர்​கள் கட்சி மற்​றும் தமிழக கட்​டிடத் தொழிலா​ளர்​கள் மத்​திய சங்​கத்தின் மாநில செயற் குழுக் கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. சங்​கத் தலை​வர் பொன்.​கு​மார் தலைமை வகித்​தார். பொதுச் செய​லா​ளர்கள் எஸ்.ஜெகதீசன், ஜெக​முரு​கன், வி.சுப்​ப​ராயலு, மாநிலப் பொருளாளர் ஆர்​.சேகர் ஆகியோர் முன்​னிலை வகித்​தனர்.

கூட்​டத்​தில் இயற்​றப்​பட்ட தீர்​மானங்​கள்: மக்​கள் தொகை அடிப்​படை​யில் தொகுதி மறு​வரையறை செய்ய முயற்​சிக்​கும் மத்​திய அரசின் செய​லால், தமிழகம் உள்​ளிட்ட தென்​மாநிலங்​களின் நாடாளு​மன்​றத் தொகு​தி​ எண்​ணிக்கை குறைவதற்​கான ஆபத்து உள்​ளது. எனவே, தற்​போதுள்ள தொகு​தி​களின் அடிப்​படை​யிலேயே, விகி​தாச்​சார முறையில் தொகுதி மறுசீரமைப்பை மேற்​கொள்ள வேண்​டும்.

கட்​டு​மானத் தொழிலா​ளர் நலவாரி​யத்​தில் பதிவு செய்​துள்ள, 40 வயதுக்கு மேற்​பட்ட தொழிலா​ளர்​களுக்கு முழு மருத்​து​வப் பரிசோதனை மேற்​கொண்​டு, அடை​யாள அட்டை வழங்​கப்​படும் திட்​டம் வரவேற்​கத்​தக்​கது. கட்​டு​மானத் தொழிலா​ளர்​களு​டைய பிள்​ளை​களுக்கு 7 இடங்​களில் தங்​கும்விடு​தி​யுடன் கூடிய தொழிற்கல்வி பயில​கங்​கள் (ஐடிஐ) தொடங்​கு​வதற்கு நிதி​நிலை அறிக்​கை​யில் அறி​வித்துள்ளதை வரவேற்கிறோம், கட்​டு​மானத் தொழிலா​ளர்​களு​டைய பிள்​ளை​களுக்கு கல்வி, விடு​திக் கட்​ட​ணமின்றி கல்வி பெறு​வதற்​கான ஏற்​பாடு​களை செய்ய வேண்​டும் என்பன உள்​ளிட்ட தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article