வசந்த காலம், இயற்கை தன்னை புதுப்பித்துக் கொள்ளும் அழகை கொண்டாடும் பருவம். இந்த பருவ காலத்தில் உலகம் வண்ணமயமான பூக்களாலும் பசுமை மாறாத மலைகளாலும் சூழப்பட்டு, வசீகரமான மற்றும் விசித்திரமான அனுபவத்தை தரும். இந்த வசந்தத்தில் இயற்கை அழகை கண்டுகளிக்க நாம் செல்ல வேண்டிய 10 அற்புதமான நாடுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

1. ஜப்பான்
ஜப்பானில் வசந்த காலமான மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சாகுரா (Cherry Blossom) மலர்கள் பூத்து குலுங்கும். டோக்கியோ, கியோட்டோ மற்றும் ஒசாகா போன்ற நகரங்கள் சாகுரா (செர்ரி ப்ளாசம்) மலர்களால் காட்சியளிக்கும். மேலும் ஜப்பானின் தெருக்களில் நிகழும் பாரம்பரிய நிகழ்ச்சிகள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியயை உண்டாக்கும்.
2. ஸ்காட்லாந்து :
வசந்த காலத்தில் ஸ்காட்லாந்து பசுமை நிறைந்த மலைகள், நீல நிற ஏரிகள் மற்றும் விதவிதமான பூக்கள் மலர்ந்த புல்வெளிகள் என ஒரு மாயாஜால உலகமாக காட்சியளிக்கும். ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பர்க் (Edinburgh) வசந்த காலத்தில் மலர்ந்த பூக்களால் மற்றும் கச்சிதமான வானிலை காரணமாக பழமையான எடின்பர்க் கோட்டை மற்றும் ஆர்தர்ஸ் சீட் போன்ற இடங்களில் பயணிக்க இதுவே சிறந்த காலம்.

3. நார்வே:
நார்வே இயற்கை நயம் மிக்க அழகான நாடுகளில் ஒன்றாகும். வசந்த காலத்தில், கடுமையான குளிர்காலம் முடிந்து பனி ஒவ்வொரு இடத்திலும் கரையத் தொடங்கும், மலைகளும் பள்ளத்தாக்குகளும் பசுமை போர்த்திக் கொள்ளும். நீர்வீழ்ச்சிகள் உருமாறும், அற்புதமான பனிப்பாறைகள் மெல்ல உருகத் தொடங்கும், பனி கரையத் தொடங்கும் போது, நார்வேயின் ஏரிகள் மிகவும் தூய்மையான நீல நிறத்தில் காட்சியளிக்கும். இதுவே நார்வேயின் வசந்த கால மகத்துவமாகும்.
4. நியூசிலாந்து:
நியூசிலாந்தில் வசந்த காலம் ஒரு அற்புதமான பருவமாகும். பசுமை மாறாத மலைகள், நீல நிற ஏரிகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புல்வெளிகள், பரவசமான நீர்வீழ்ச்சிகள் மற்றும் டெகபோ ஏரியில் (Lake Tekapo)லூபின் மலர் மலர்ச்சியால் நீல நீரின் பின்னணியில் பசுமை நிறமும் வைலெட் நிற மலர்களும் இணைந்த கண்கவர் காட்சியளிக்கும். நியூசிலாந்தின் தேசிய பறவையான கியோஸ்க் பறவை (Kiwi Bird) வசந்த காலத்தில் அதிகமாக காணப்படும். இவை அனைத்தும் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கின்றன.
5. கனடா:
கனடா உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகும். கனடாவில் கடும் குளிர்காலத்திற்குப் பிறகான வசந்த காலத்தில் பனிகள் கரையத் தொடங்கி, நயாகரா நீர்வீழ்ச்சி முழு எழுச்சியில் ஓடத் தொடங்கும். பூங்காக்கள் வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்கப்படுகின்றன.ஒவ்வொரு மே மாதத்திலும், ஓட்டாவாவில் லட்சக்கணக்கான டுலிப் மலர்கள் பூத்து வண்ணமயமாக மாற்றுகின்றன. கனடாவின் முக்கிய நகரங்கள் பல்வேறு திருவிழாக்களாலும், நிகழ்வுகளாலும் மற்றும் இயற்கை எழிலாலும் நிறைந்து நகரத்தை வண்ணமயமாக மாற்றுகின்றன.
6. ஸ்விட்சர்லாந்து:
ஸ்விட்சர்லாந்து இயற்கை அழகை முழுமையாக காணக்கூடிய அற்புதமான நாடு. வசந்த காலத்தில் பனி மூடிய மலைகளின் பின்னணியில் வண்ணமயமான மலர்களால் நிறைந்து காணப்படும். அல்ப்ஸ் மலைகளின் புல்வெளிகள், லாவண்டர் புல்வெளிகள், நீல நிறத்தோடு பிரகாசிக்கும் லூசேர்ன் ஏரி,ப்ளூ செ மற்றும் ஜெனீவா ஏரி, வசந்தத்தை வரவேற்க இளைஞர்கள் பாரம்பரிய உடைகளில் பங்கேற்கும் பிரபல திருவிழா என அனைத்தும் ஸ்விட்சர்லாந்தின் வசந்தகால அழகைக் கொண்டாடுகின்றன.
7. ஐஸ்லாந்து:
கடுமையான குளிர்காலத்திற்குப் பிறகு, வசந்தத்தில் ஐஸ்லாந்தின் நிலங்கள் பசுமை நிறமாக மாறி கண்கவர் தோற்றம் அளிக்கின்றன. ப்ளூ லகூன் (Blue Lagoon),மைவாட்ன் நேச்சுரல் பாத்ஸ் (Myvatn Nature Baths), ஸ்க்ரேயுக்கவேரி ஹாட் ஸ்பிரிங் போன்ற பிரபலமான இயற்கை சூடான நீரூற்றுகள் மற்றும் குல்போஸ் (Gullfoss) தங்க நிறத்தில் பிரகாசிக்கும் நீர்வீழ்ச்சி என கண்கொள்ளாக் காட்சியளிக்கின்றன.

8. இத்தாலி:
இத்தாலியின் முக்கிய நகரங்கள் வசந்தத்தில் வண்ணமயமான தோற்றத்தை அடைகின்றன. அழகிய ஏரிகள், பசுமை நிற மலைப்பகுதிகள், அழகிய கடற்கரைகள், மலர்களால் அழகு பெற்ற நகரங்கள் மற்றும் தோட்டங்கள், வரலாற்று இடங்கள், கண்கவர் கலாச்சார திருவிழாக்கள் மற்றும் மிதமான வானிலை என வசந்த காலத்தில் இத்தாலி வண்ணமயமாக காட்சியளிக்கின்றன.

9. பிரான்ஸ்:
பிரான்ஸ் அழகிய நகரங்கள், மலர் சூழ்ந்த கிராமங்கள், பசுமை நிறமாய்க் காட்சியளிக்கும் வயல்கள், மண்மணக்கும் திராட்சை தோட்டங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகள் என அனைத்தும் சேர்ந்து பிரான்சை வசந்த காலத்தில் ஒரு கண்கவர் பருவமாக மாற்றுகின்றன. பிரோவென்ஸின் உலக புகழ்பெற்ற லாவெண்டர் வயல்கள், என இயற்கையும் கலாச்சார விழாக்களும் ஒருங்கிணைந்து மகிழ்வளிக்கின்றன.
10. ஆஸ்திரியா:
ஆஸ்திரியாவில் பசுமை நிற மலைகள், வரலாற்று அரண்மனைகள், மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்படும் அழகிய நகரங்கள் கொண்ட ஒரு அற்புதமான நாடாகும். வசந்தகாலத்தில் பசுமை நிறமாய்க் காட்சியளிக்கும் அல்ப்ஸ் மலைகள், பெல்வெடேர் அரண்மனை, க்ராஸ் அரண்மனை , சோன்ப்ரூன் அரண்மனை தோட்டம் என வசந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனைகள், நீல நீர் ஏரிகள் மற்றும் மொசார்ட் இசை நிகழ்ச்சிகள், கலாச்சார விழாக்கள் என நாடு முழுவதும் நடைபெறுகின்றன.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet