ரயில் பயணம் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பயணிக்கும் ஒரு பொது போக்குவரத்து சாதனம் ஆகும். மெதுவான ரயில் பயணத்தின் இனிமையான சத்தம், நெல் வயல்கள் மற்றும் கிராமங்கள் வழியாக நிதானமான பயணத்தில் ஜன்னல் ஓர வேடிக்கைகள் போன்றவை ரயில் பயணத்தை இனிமையாக்குகின்றன. இருப்பினும் சமீப காலங்களில் வேகத்தின் தேவை இந்தியாவில் ரயில்வே சேவையை மறுவடிவமைத்துள்ளது. புகழ்பெற்ற ராஜதானி முதல் வந்தே பாரத் வரை இந்த ரயில்கள் உச்சவேகம் மற்றும் மென்மையான சேவையை அளிக்கின்றன. மணிக்கு 200 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்தியாவின் 13 ரயில்கள் பற்றி இங்கே பார்க்கலாம்

தேஜாஸ் எக்ஸ்பிரஸ்
இந்திய ரயில்வே துறையால் இயக்கப்படும் இந்தியாவின் முதல் முழுமையான குளிரூட்டப்பட்ட அதிவேக ரயிலான தேஜாஸ் மணிக்கு 200 கி.மீ., வேகத்தை எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் மும்பை - மட்காவ்ன், சென்னை - மதுரை, லக்னோ - புது டெல்லி மற்றும் அகமதாபாத் - மும்பை ஆகிய நான்கு முக்கிய வழித்தடங்களை கொண்டுள்ளது.
வந்தே பாரத்
வந்தே பாரத் அதிவேக விரைவு ரயில் 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது அதன் அதிவேகம் வைஃபை இணைப்பு மற்றும் பரந்த கண்ணாடி காட்சிகள் உள்ளிட்ட உயர்தர வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 40க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயங்குகின்றன. 136 ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன.

கதிமான் எக்ஸ்பிரஸ்
இந்தியாவின் முதல் அதிவேக சொகுசு ரயிலான கதிமான் எக்ஸ்பிரஸ் , அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும். டில்லிக்கும், ஆக்ராவுக்கும் இடையில் ஆன 188 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 100 நிமிடங்களில் கடக்கிறது. இந்த ரயிலில் பயோ டாய்லெட்டுகள், ஒவ்வொரு இருக்கையின் பின்புறத்திலும் எட்டு அங்குல எல்சிடி திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. கதிமானில் தேஜாஸ் போன்ற ஒரு பேன்ட்ரி இல்லை என்றாலும் உள்ளே கேட்டரிங் வசதி, மினி கேட்டரிங் வசதி உள்ளது.
போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ்
முதல் சதாப்தி ரயிலான போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் 1988 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சதாப்தி என்ற வார்த்தைக்கு நூற்றாண்டு என்று பொருள். இந்த ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 150 கிலோமீட்டர் ஆகும். போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் டில்லியில் தொடங்கி போபாலின் ஹபீப்கஞ்ச் வரை 79 கிலோ மீட்டர் தூரத்தை சுமார் 8 மணி நேரத்தில் கடக்கிறது.
தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்
இந்தியாவில் உள்ள அனைத்து ராஜ்தானி ரயில்களிலும் வேகமானது மும்பை ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ். அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. மும்பை ராஜதானி எக்ஸ்பிரஸ் என்பது மும்பை சென்ட்ரல் மற்றும் டெல்லியை இணைக்கும் ஒரு தினசரி சேவை ஆகும். இது சூரத் வதோதரா மற்றும் கோட்டா ஆகிய முக்கிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.
டில்லி கான்பூர் சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ்
டில்லி மற்றும் கான்பூர் சென்ட்ரல் இடையேயான 440 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய சதாப்தி எக்ஸ்பிரஸ் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் காலை மற்றும் மாலை வேளைகளில் சிற்றுண்டிகள், தேநீர், காபி, சூப் போன்ற உணவுகள் வழங்கப்படுகின்றன. 12 குளிரூட்டப்பட்ட நாற்காலி கார்கள் உட்பட 15 பெட்டிகளுடன் இந்த ரயில் ஸ்லீப்பர் வகுப்பு இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. டில்லி, காஜியாபாத், எட்டாவா மற்றும் கான்பூர் போன்ற நிலையங்களில் மினி கேட்டரிங் பயணத்துடன் இந்த ரயில் இயங்குகிறது.
டில்லி ஹவுரா ராஜதானி எக்ஸ்பிரஸ்
1969 ஆம் ஆண்டு முதல் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹவுரா ராஜதானி எக்ஸ்பிரஸ் முழுமையாக குளிரூட்டப்பட்ட முதல் ரயிலாகும். மேலும் வைஃபை சேவை அறிமுகப்படுத்திய முதல் ரயிலாகும். இந்த ரயில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. கான்பூர், சென்ட்ரல், பிரயாக்ராஜ் மற்றும் தன்பாத் போன்ற முக்கிய நிலையங்களில் நின்று செல்கிறது. கயா ஜங்ஷன் வழியாகவும் பாட்னா ஜங்ஷன் வழியாகவும் இரண்டு வழித்தடங்கள் மற்றும் முதல் ஏசி , ஏசி 3 டயர் வரை பல பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
சீல்டா துரந்தோ எக்ஸ்பிரஸ்
அறிமுகப்படுத்தப்பட்டது முதல் வேகமான துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலான இந்த ரயில் மத்திய கோல்கத்தாவின் சீல்டாவிலிருந்து டில்லிக்கு இடைவிடாமல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. இந்த ரயில் கலைநயம் மிக்க மஞ்சள் பச்சை நிற வெளிப்புறத்தை கொண்டுள்ளது. மேலும் வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்கப்படுகிறது.
லோக்மான்ய திலக் டெர்மினஸ்-ஹஸ்ரத் நிஜாமுதீன் ஏசி எக்ஸ்பிரஸ்
லோக்மான்ய திலக் டெர்மினஸ் நிஜாமுதீன் ஏசி எக்ஸ்பிரஸ் பட்ஜெட் உணர்வுள்ள பயணிகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும். இந்த எக்ஸ்பிரஸ் அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. இந்த ரயில் மும்பைக்கும், டெல்லிக்கும் இடையே பயணம் செய்வதற்கு நேரடியான ஒரு வழியாகும். ரயிலில் கேட்டரிங், மினி கேட்டரிங் சேவைகள் உள்ளன.
பாந்த்ரா-நிஜாமுதீன் கரிப் ரத் எக்ஸ்பிரஸ்
இந்த எக்ஸ்பிரஸ் ரயில் கரிப் ரத் சேவையில் மிக வேகமானது. மும்பை- டில்லியை இணைக்கும் இரண்டாவது வேகமான ரயிலாகும். பாந்த்ரா டெர்மினலில் தொடங்கி தெற்கு டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீனில் முடிவடையும். பாந்த்ரா-நிஜாமுதீன் கரிப் ரத் எக்ஸ்பிரஸ் அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. இந்த ரயில் மற்ற விரைவு ரயில்களை விட குறுகியதாக இருந்தாலும் அதிக இருக்கை வசதிகளை கொண்டுள்ளது.
அகமதாபாத் மும்பை சென்ட்ரல் ஏசி டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ்
இந்திய ரயில்வே வரலாற்றின் ஒரு முன்னோடி ரயில் மும்பை சென்ட்ரல் அகமதாபாத் டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ஆகும். நாட்டின் முதல் டபுள் டெக்கர் ரயிலான இது 2012 இல் ஆண்டு தொடங்கப்பட்டது. இது மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான பயணத்தை வெறும் ஏழு மணி நேரத்தில் கடக்கிறது. மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. தினமும் 1500 பயணிகள் அமரக்கூடிய வசதிகள் மற்றும் தேநீர், காபி, சிற்றுண்டிகள் போன்ற உணவு வகைகளுடன் இந்த பரபரப்பான நகரங்களுக்கு இடையே செல்ல விரும்பும் பயணிகளுக்கு இது ஒரு சிறந்த ரயில் ஆகும்.
ஹவுரா துரந்தோ எக்ஸ்பிரஸ்
ஹவுரா துரந்தோ எக்ஸ்பிரஸ் ஒரு அதிவேக ரயில் ஆகும். முழுமையான குளிரூட்டப்பட்ட மற்றும் நேர்த்தியான LHB பெட்டிகளுடன் பொருத்தப்பட்ட இந்த ரயில், மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. காலை தேநீர் மற்றும் காலை உணவு முதல் மதிய உணவு, மாலை தேநீர் மற்றும் இரவு உணவு வரை பயணிகளுக்கு இலவசமாக இந்த ரயிலில் வழங்கப்படுகிறது.
மகாராஷ்டிரா சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ்
மகாராஷ்டிராவின் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் இந்திய ரயில்வேயின் வாரத்திற்கு இருமுறை இயக்கப்படும் ஒரு வேகமான ரயிலாகும். அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், கோட்டா சந்திப்பு, வதோதரா சந்திப்பு மற்றும் போரிவலி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே நிறுத்தப்படும். இரண்டாவது ஏசி ஸ்லீப்பர் மூன்றாம் ஏசி மற்றும் முன்பதிவு செய்யப்படாத இருக்கைகள், பிரத்தியேக பேன்ட்ரி கார் போன்ற வசதிகள் இந்த ரயிலில் உள்ளன.
நிஜாமுதீன் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ்
ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் டெல்லி வழியாக விரைவான மற்றும் சிக்கனமான பயணத்திற்காக இயக்கப்படும் ரயில் நிஜாமுதீன் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகும். பகல் நேர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆக தினமும் இயங்கும் இது ஏசி சேர் கார்கள், இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் முன்பதிவு செய்யப்படாத இருக்கைகள் ஆகிய வசதிகளுடன் உள்ளது. இது பலதரப்பட்ட பயணிகளுக்கும் ஏற்றது. இதில் பல ஏசி பெட்டிகள் மற்றும் கூடுதல் ஆடம்பரத்திற்கான எக்ஸிக்யூட்டிவ் வகுப்பு இருக்கைகளும் உள்ளன. பேன்ட்ரி கார் இல்லாவிட்டாலும் ரயிலில் உள் மற்றும் மினி கேட்டரிங் சேவைகள் உள்ளன.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet