ARTICLE AD BOX
மார்ச் 26-க்கு குறிச்சாச்சு.. ரூ.15,999 போதும்.. 18GB ரேம்.. 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த மார்கெட்டே மூக்கில் விரல் வைக்கும்படி அடிமட்ட பட்ஜெட்டில் 18 ஜிபி ரேம், 6000mAh பேட்டரி, 45W சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, ஏரோ ஸ்பேஸ் கூலிங் சிஸ்டம், 50 எம்பி ஏஐ கேமரா போன்ற நம்ப முடியாத பீச்சர்களுடன் ரியல்மி பி3 5ஜி (Realme P3 5G) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலாவது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட் மாடலாக வெளியாகி இருக்கும் இந்த ரியல்மி போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.
ரியல்மி பி3 5ஜி அம்சங்கள் (Realme P3 5G Specifications): இந்த ரியல்மி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) மற்றும் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 5ஜி எஸ்ஓசி (Octa Core Snapdragon 6 Gen 4 5G SoC) சிப்செட் கிடைக்கிறது.

இந்த சிப்செட் கொண்ட முதல் மாடலாக ரியல்மி பி3 5ஜி இந்தியாவில் வெளியாகி இருக்கிறது. இது பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் சிப்செட் மடலாகும். ஏனென்றால், இதில் ஜிடி பூஸ்ட் (GT Boost) மற்றும் 90 எப்பிஎஸ் பிஜிஎம்ஐ (90FPS BGMI) கிடைக்கிறது. 10 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) கொடுக்கிறது.
8 ஜிபி ரேம் மாடல்களில் கூடுதலாக 10 ஜிபி விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது. இந்த ரியல்மி பி3 5ஜி போனில் மூன்று மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆகவே, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது.
ஏரோ ஸ்பேஸ் கூலிங் சிஸ்டம் (Aerospace Cooling System) மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு 8.5 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும். IP69 வாட்டர் ப்ரூஃப் பாடி கிடைக்கிறது. 30 நிமிடங்கள் வரையில் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கும். 50 எம்பி ஏஐ கேமரா மெயின் கேமரா + 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த ரியல்மியில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.67 இன்ச் (1080 x 2400) அமோலெட் ஈஸ்போர்ட்ஸ் (AMOLED Esports) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1500Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவில் ஏஐ அல்ட்ரா டச் கன்ட்ரோல் (AI Ultra Touch Control) கிடைக்கிறது. ஆகவே, கேமிங் டச் அவுட்புட் பக்காவாக இருக்கும். இதுபோக ஏஐ மோஷன் கன்ட்ரோல் (AI Motion Control) வருகிறது. ஆகவே, ஸ்மார்ட்போனின் டைரெக்சனு ஏற்ப கன்ட்ரோல்களை செட் செய்து கொள்ளலாம். இந்த போனின் டிசைனும் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப இருக்கிறது.
ஆகவே, ஸ்பேஸ் சில்வர் (Space Silver), காமெட் கிரே (Comet Grey), நெபுளா பிங்க் (Nebula Pink) ஆகிய கலர்கள் இருக்கின்றன. இதில் சில்வர் வேரியண்ட் கிட்டத்தட்ட மெட்டாலிக் பினிஷிங்கில் சைபர்-மெக்கா லுக் கொடுக்கிறது. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,999ஆகவும் இருக்கிறது.
மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2000 அறிமுக சலுகை கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் எர்லி-பேர்ட் விற்பனையில் கிடைக்க இருக்கிறது. இந்த எர்லி-பேர்ட் விற்பனை இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. ஓப்பன் சேல் வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்க இருக்கிறது.