ARTICLE AD BOX
மார்ச் 19 காலி.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. AMOLED பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ரியல்மி பி3 ப்ரோ 5ஜி (Realme P3 Pro 5G) மற்றும் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (Realme P3X 5G) போன்கள் வெளியாகி விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகின்றன. இப்போது, அதேபோல அடிமட்ட பட்ஜெட்டில் ரியல்மி பி3 5ஜி (Realme P3 5G) போனை ரியல்மி இந்தியா நிறுவனம் களமிறக்க இருக்கிறது. இந்த ரியல்மி போனின் வெளியீட்டு தேதி, விற்பனை மட்டுமல்லாமல் முக்கிய பீச்சர்களும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மார்ச் 19ஆம் தேதி இந்த ரியல்மி பி3 5ஜி போன் வெளியாக இருக்கிறது. அதே தேதியில் ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி (realme P3 Ultra 5G) போனும் வெளியாக இருக்கிறது. ஆனால், ரியல்மி பி3 5ஜி போன் பட்ஜெட் மாடலாக இருப்பதால், ஒட்டுமொத்த கவனமும் இந்த போன் மீது இருக்கின்றன. ஏனென்றால், ரியல்மி பி3 ப்ரோ 5ஜி போன் ரூ.22,999 பட்ஜெட்டில் இந்தியாவில் கிடைக்கிறது.

ஆகவே, இந்த ரியல்மி பி3 5ஜி போன் ரூ.17,000 பட்ஜெட்டில் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. இந்த பட்ஜெட்டில் பேட்டரி, கேமரா மற்றும் டிசைனில் பின்னியெடுக்கிறது. அதே நேரத்தில் ஏஐ பீச்சர்களையும் கொடுக்கிறது. இதனாலேயே அந்த போனுக்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இப்போது, ரியல்மி நிறுவனம் உறுதி செய்த பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.
ரியல்மி பி3 5ஜி அம்சங்கள் (Realme P3 5G Specifications): இந்த ரியல்மி போனில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 (Snapdragon 6 Gen 4) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட் இந்திய மார்கெட்டில் புதிதாக களமிறங்குகிறது. ஆகவே, முதலில் ரியல்மி பி3 5ஜி போனில் கிடைக்க இருக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு கிடைக்கும் ஜிடி பூஸ்ட் (GT Boost) மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு பீச்சர்கள் வருகின்றன.
ஆகவே, ஏஐ மோஷன் கன்ட்ரோல் (AI Motion Control), ஏஐ அல்ட்ரா டச் கன்ட்ரோல் (AI Ultra Touch Control) கிடைக்க இருக்கிறது. இதுபோக ஏரோஸ்பேஸ்-கிரேடு கூலிங் சிஸ்டம் (Aerospace-grade Cooling System) வர இருக்கிறது. டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கும்படி ஸ்பேஸ் சில்வர் (Space Silver), கமெட் கிரே (Comet Grey) மற்றும் நெபுலா பிங்க் (Nebula Pink) ஆகிய கலர்கள் இருக்கின்றன.
ரியல்மி பி3 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி போன்களில் கிடைத்ததை போலவே 6000mAh பேட்டரியானது, இந்த ரியல்மி பி3 5ஜி போனில் கிடைக்க இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. IP69 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.
இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை பார்க்கையில் இந்த ரியல்மி பி3 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. அதேபோல முந்தைய மாடல்களில் கிடைத்த ரியல்மி யுஐ 6.0 கிடைக்க இருக்கிறது.
மேலும், 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி செகண்டரி கேமரா வர இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. இதுவரையில் பார்த்த பீச்சர்கள் மற்றும் விலையில் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இருப்பினும் பட்ஜெட்டில் ரேம் வேரியண்ட்களுக்கு ஏற்ப மாற்றங்கள் இருக்கும். ஆனால், ஆரம்ப விலை ரூ.17,000 பட்ஜெட்டில் இருக்கும்.