மார்ச் 13-க்கு இதுதான்.. ரூ.9,249-க்கு 50MP கேமரா.. 5160mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. ஏர்டெல் SIM எடிஷன்!

8 hours ago
ARTICLE AD BOX

மார்ச் 13-க்கு இதுதான்.. ரூ.9,249-க்கு 50MP கேமரா.. 5160mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. ஏர்டெல் SIM எடிஷன்!

Mobile
oi-Harihara Sudhan
| Published: Monday, March 10, 2025, 19:11 [IST]

ஏர்டெல் கஸ்டமர்களுக்கு அடிச்சது ஆஃபர்னு சொல்லும்படி 50 எம்பி கேமரா, 5160mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் போன்ற பீச்சர்களுடன் போக்கோ எம்7 5ஜி ஏர்டெல் எடிஷன் (POCO M7 5G Airtel Edition) களமிறங்கி இருக்கிறது. இந்த போக்கோ போனின் விற்பனை தேதி, பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்ப அடிமட்ட விலையில் பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் போக்கோ எம்7 5ஜி போன் வெளியாகி விற்பனைக்கும் வந்துவிட்டது. பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இப்போது, அதைவிட மலிவான விலையில் ஏர்டெல் எடிஷனில் வெளியாகி இருக்கிறது.

மார்ச் 13-க்கு இதுதான்.. ரூ.9,249-க்கு 50MP கேமரா.. 5160mAh பேட்டரி!

அதாவது, இந்த ஏர்டெல் எடிஷனானது ரூ.9,249 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்கோ எம்7 5ஜி ஏர்டெல் எடிஷனை மார்ச் 13ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம். பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போக்கோ போனில் ஏர்டெல் சிம் கார்டு (Airtel SIM Card) மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஆகவே, ஏர்டெல் கஸ்டமர்களில் 5ஜி சேவைக்கு மாற விரும்புவோர் இந்த போனை ஆப்ஷனில் எடுக்கலாம். ஏனென்றால், ரூ.10,000 பட்ஜெட்டுக்கு 5ஜி கனெக்டிவிட்டி மட்டுமல்லாமல், மிட்-ரேஞ்ச் சென்சார் கேமரா சிஸ்டம், பட்ஜெட்டைவிட கூடுதல் பிரீமியம் கொடுக்கும் டிசைன் போன்றவற்றில் இந்த போக்கோ எம்7 5ஜி பின்னி எடுக்கிறது.

போக்கோ எம்7 5ஜி அம்சங்கள் (POCO M7 5G Specifications): இந்த போக்கோ போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதில் 6 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலையே ரூ.9,249ஆக (ஏர்டெல் எடிஷன்) இருக்கப் போகிறது. 1 டிபிக்கான எஸ்டி கார்டு சிலாட் உள்ளது.

அமோலெட் டிஸ்பிளே எதிர்பார்க்க முடியாது, இருப்பினும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூன் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கும்படி 6.88 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் விலை டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) சப்போர்ட் கிடைக்கிறது.

2 ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. இந்த ஓஎஸ் பேஸ்டு சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) மற்றும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் வருகிறது. மாலி ஜிபியு எதிர்பார்த்தாலும், பக்காவாக அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் சிஸ்டம் மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் பொதுவாக ரெசிஸ்டன்ட் கிடைக்காது. ஆனால், இந்த போக்கோவில் IP52 டஸ்ட் & ஃபிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. அதேபோல 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பெரிய 5160mAh பேட்டரி வருகிறது.

மேலும், பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர் (Bottom Firing Speaker), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) மற்றும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டி கிடைக்கிறது. இந்த போக்கோ போனில் மின்ட் கிரீன் (Mint Green) கலர் இருக்கிறது. அதேபோல சாடின் பிளாக் (Satin Black) மற்றும் ஓசன் ப்ளூ (Ocean Blue) ஆகிய கலர்களும் கிடைக்கின்றன.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
POCO M7 5G Airtel Edition Launched Sale From March 13 on Flipkart Check Specifications Price
Read Entire Article