ARTICLE AD BOX
Published : 25 Feb 2025 02:32 PM
Last Updated : 25 Feb 2025 02:32 PM
மார்ச் 10-ல் ஆளுநர் உரையுடன் புதுச்சேரி சட்டப்பேரவை தொடக்கம்: 12-ல் பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் வரும் மார்ச் 10-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடுகிறது. மார்ச் 12-ல் பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார் என்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேரவைத்தலைவர் செல்வம் கூறியதாவது: “புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடர் வரும் மார்ச் 10-ல் காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அப்போது துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து மார்ச் 12ம் தேதி காலை 9.30 மணிக்கு வரும் 2025-26 பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி இக்கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்று முடிவு செய்யும்.
இந்த அரசு பதவியேற்று தேர்தல் காலங்களைத் தவிரத்து இரண்டாவது முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. பாலங்கள், சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.1000 கோடி தர ஒப்புதல் தந்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பேரவைக்கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு விரைவில் ஒப்புதல் கிடைத்துவிடும். ஏறக்குறைய 90 சதவீதம் பட்ஜெட் நிதி செலவிடப்பட்டுள்ளது. மார்ச் 31க்குள் முழுமையாக செலவிடப்படும்.
அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டனர். தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். துறை தலைவர்கள் ஓரிரு நாட்களில் மாற்றப்படுவார்கள். விரைவில் முழுமையாக துறைகள் முழுமையாக இயங்கும். புதுச்சேரி அரசு வைத்த கோரிக்கைக்கு நிதியை ஒதுக்கியுள்ளது. ரூ.3200 கோடி கோரியிருந்தோம் ரூ.1000 கோடி தருவதாக தெரிவித்துள்ளனர்.
அதற்கான கூட்டத்துக்கு தலைமைச்செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் டெல்லி செல்கின்றனர். எம்எல்ஏக்கள் தங்கள் கடமையை நல்ல முறையில் செய்யவேண்டும். ஒருமையில் பேசுவது, மற்றவர்களை தரம் தாழ்த்தி பேசுவதை பேரவையில் அனுமதிக்கமாட்டோம். சட்டமன்ற விதிகளுக்கு புறம்பாக நடந்தால் அதற்கான விடை பேரவையில் அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- ஊதிய உயர்வு உள்ளிட்ட காவல் ஆணைய பரிந்துரைகளை செயல்படுத்த அன்புமணி வலியுறுத்தல்
- ரமலான் நோன்புக் கஞ்சி தயாரிக்க மசூதிகளுக்கு 7,920 மெட்ரிக் டன் பச்சரிசி: தமிழக முதல்வர் உத்தரவு
- கடலூர்: முதல்வரிடம் செல்போன் இல்லை என்ற கல்லூரி மாணவி; உடனே வாங்கித்தந்த அமைச்சர்
- தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் | மார்ச் 5-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு