ARTICLE AD BOX
மலிவு விலையில் கிடைக்கும் Jio போன்.. 1000mAh பேட்டரி.. UPI.. 4ஜி ஆதரவு.. எந்த மாடல்?
ஜியோ (Jio) நிறுவனத்தின் ஜியோபாரத் கே1 கார்பன் 4ஜி (JioBharat K1 Karbonn 4G) போனின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக ஜியோபே யுபிஐ, 4ஜி ஆதரவு, 1000mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது ஜியோபாரத் கே1 கார்பன் 4ஜி போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஜியோபாரத் கே1 கார்பன் 4ஜி ஆனது முன்பு ரூ.999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போனின் விலை குறைக்கப்பட்டு ரூ.699 விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் தளத்தில் இந்த போன் கிடைக்கிறது. அதுவும் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் இந்த போனை வாங்கிவிட முடியும்.

ஜியோபாரத் கே1 கார்பன் 4ஜி அம்சங்கள் (JioBharat K1 Karbonn 4G specifications): 1.77-இன்ச் கலர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த ஜியோபாரத் கே1 கார்பன் 4ஜி மாடல். மேலும் இந்த போன் மெமரியை நீடிக்க அனுமதிக்கும் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் வருகிறது. இதன் கீழ் பயனர்கள் 128ஜிபி வரை ஸ்டோரேஜை விரிவாக்கலாம். மேலும் இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
அதேபோல் ஜியோபாரத் கே1 கார்பன் 4ஜி ஆனது 1,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இது டிஜிட்டல் ரியர் கேமராவுடன் வருகின்றது. ஜியோ நெட்வொர்க்கின் கீழ் மட்டுமே வேலை செய்யும் ஜியோபாரத் கே1 கார்பன் 4ஜி ஆனுத 23 இந்திய மொழிகளுக்கான ஆதரவை கொண்டுள்ளது. இந்த போனில் ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ பே (JioPay) போன்ற ஆப்களும் உள்ளன.
மேலும் ஜியோபே ஆப் வழியாக க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் பயனர்கள் யுபிஐ (UPI) கட்டணங்களை செய்யலாம். குறிப்பாக இந்த போன் கால் ரெக்கார்டிங்கை (Call Recording) ஆதரிக்கிறது. அதேபோல் இந்த ஜியோபாரத் போன் வாங்கும் பயனர்களுக்கு சில மலிவு
விலை திட்டங்களைப் பயன்படுத்தலாம்.
அதன்படி ஜியோ ரூ.121 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் தினமும்.0.5 டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே மொத்தம் 14ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ், ஜியோசாவன், ஜியோசினிமா, ஜியோ டிவி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

மேலும் ஜியோபாரத் போன் பயனர்கள் ரூ.234 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 0.5ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே மொத்தமாக 28ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள், 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும்.
இதுதவிர ஜியோபாரத் போன் பயனர்கள் ரூ.1234 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 0.5ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 336 நாட்கள் ஆகும். எனவே மொத்தமாக 168ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள், 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும்.