ARTICLE AD BOX
Published : 24 Feb 2025 04:08 PM
Last Updated : 24 Feb 2025 04:08 PM
பொதுத் தேர்வு காலத்தில் மின்தடை கூடாது: பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு

சென்னை: மாணவர்கள் அரசு பொதுத் தேர்வு எழுதுவதை முன்னிட்டு, அடுத்த 2 மாதங்களுக்கு மின்தடை செய்யக் கூடாது என பொறியாளர்களுக்கு, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, தமிழக மின்வாரியம் வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்கம்பம், கேபிள், மின்விநியோக பெட்டி, மின்மாற்றி உள்ளிட்ட சாதனங்கள் உதவியுடன் விநியோகம் செய்கிறது. இவற்றில் 24 மணி நேரமும் மின்சாரம் செல்வதால் எப்போதும் வெப்பத்துடன் இருக்கும். எனவே, மின்சாதனங்களின் பழுது ஏற்படுவதை தடுக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணி நடைபெறும் பகுதிகளில் உள்ள வீடு, கடைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். இந்த விவரத்தை மின்வாரியம் முன்கூட்டியே நுகர்வோருக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தியாகவும், டிவி, நாளிதழ்களில் செய்தியாகவும் வெளியிடும். இந்நிலையில், தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளும், கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளும் தொடங்கப்பட உள்ளன.
எனவே, தேர்வு சமயத்தில் மின்தடை ஏற்படுவதைத் தவிரக்கும் வகையில், வரும் ஏப்ரல் மாதம் வரை மின்சாதன பராமரிப்பு பணிகளுக்கு மின்வாரியம் தடை விதித்துள்ளது. மேலும், அடுத்த இரு மாதங்களுக்கு பகலில் மின்தடை செய்யக் கூடாது. மிகவும் அவசிய தேவை என்றால், தலைமைப் பொறியாளர்களிடம் முன்கூட்டியே அனுமதி பெற்று பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- “வன உரிமை சட்டத்தை தமிழக அரசு ஆமை வேகத்தில் செயல்படுத்துகிறது” - பெ.சண்முகம் குற்றச்சாட்டு
- விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவில் மியூச்சுவல் ட்ரான்ஸ்ஃபரான திமுக அவைத் தலைவர்கள்
- ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவுக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி
- குறைந்த விலை, தொழில் வாய்ப்பு - ‘முதல்வர் மருந்தகம்’ நோக்கத்தை பட்டியலிட்ட ஸ்டாலின்