கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு, இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். சுற்றுலா, வேலை, வர்த்தம், கலாச்சாரம் என பலவற்றிற்கும் புகழ்பெற்ற நகரமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலித்து மகிழ செல்ல வேண்டிய பெங்களூரு தான். அனைத்து விதமான தனித்துவமான சிறப்புகளையும் கொண்ட பெங்களூருவிற்கு சென்றால் மிஸ் பண்ணாமல் அனுபவித்து மகிழ வேண்டிய சிறப்பு அம்சங்கள் பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம்.

பன்னரகட்டா உயிரியல் பூங்கா
பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் உள்ள மிருகக்காட்சி சாலை, பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் சஃபாரி போன்றவை இந்த வனவிலங்கு பூங்காவில் அமைந்துள்ளன. குழந்தைகள் இந்த பூங்காவில் உள்ள விலங்குகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
வொண்டர்லா அம்யூச்மென்ட் பார்க்
இந்த பூங்காவில் சிலிர்ப்பூட்டும் சவாரிகள், நீர் சறுக்குகள் மற்றும் குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக விளையாட்டு இடம் கொண்டுள்ள ஒரு அற்புதமான கேளிக்கை விளையாட்டு பூங்கா ஆகும். இந்தியாவின் மிகப் பெரிய கேளிக்கை பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும். த்ரில்லிங்கான ரைடுகள், நீர் விளையாட்டுக்கள் என குடும்பத்துடன் சென்று மகிழ ஏற்ற இடமாகும்.

ஜவஹர்லால் நேரு கோளரங்கம்
குழந்தைகள் விண்வெளி, நட்சத்திரங்கள் மற்றும் கோள்களை பற்றி நேரடியாக கற்றுகொள்ளகூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் கல்விக்கான பெங்களூரு சங்கத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த கோளரங்கள், அனைத்து வயதினருக்கும் கல்வி மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை தரும். வானியல் அறிவியல், பிரபஞ்ச அதிசயங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டும் இடமாகும்.
பெங்களூரு மீன் காட்சியகம்
பல்வேறு வகையான மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் நிறைந்த நீருக்கடியில் உள்ள இந்த காட்சியகம் குழந்தைகளை மிகவும் கவர்ந்திழுக்கும் வகையிலும் கற்றுகொள்ளகூடிய வகையிலும் அமைந்துள்ளது.
லால்பாக் தாவரவியல் பூங்கா
இந்த பூங்காவில் பிரஞ்சு, பெர்சியன் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த தாவரங்கள் உள்ளன. இங்கு புகழ்பெற்ற கண்ணாடி மாளிகையும் உள்ளது. இந்த பூங்காவில் குழந்தைகள் ஓடியாடி விளையாட அழகான மற்றும் அமைதியான இடமாகும்.
கிட்சானியா:
கிட்சானியா குழந்தைகளுக்காக கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பான தனித்துவமான உலகளாவிய இண்டோர் பொழுதுபோக்கு மற்றும் கற்றல் மையம் ஆகும். இந்த தீம் பார்க் குழந்தைகளுக்கு நிஜ வாழ்க்கை நடவடிக்கைகளுடன் உண்மையான நகரத்தின் உணர்வையும் தருகிறது. நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான இந்த தீம் பார்க்கை கூகுள், எஸ்பிஎஸ் பேங்க், மாருதி சுஸூகி போன்ற நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.
ஸ்னோ சிட்டி:
பெங்களூருவின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த ஸ்னோ சிட்டி குழந்தைகள் குளிர்கால விளையாட்டுகளை விளையாட மிகவும் சிறந்த இண்டோர் பூங்காவாகும். கார்டன்ஸ் நகரில் உள்ள இந்த தனித்துவமான தீம் பார்க், பனி பிரியர்களுக்கான ஒரு அற்புத நகரமாகும். 12,500 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது இந்த தீம் பார்க் திரும்பிய பக்கமெல்லாம் சிலிப்புடனும் உற்சாகத்துடன் உங்களை வைத்திருக்கும்.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet