நிம்மதியாக மூத்த குடிமக்கள் சென்று வர ஏற்ற தென்னிந்தியாவின் டாப் 10 சுற்றுலா தலங்கள்

3 days ago
ARTICLE AD BOX

வயது முதிர்ந்தோரில் பலபேர் பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து விலகி அமைதியான சூழலில் தான் வாழ விரும்புவார்கள். அழகிய காட்சிகள், அமைதியான வாழ்க்கை, எந்த தொந்தரவும் இல்லாத ஒரு ஓய்வு நகரத்தை தங்கள் வயதான காலத்தில் செலவிட தான் விரும்புவார்கள். மூத்த குடிமக்கள் பயண அனுபவம் சிறப்பாக இருக்க வேண்டுமெனில் அமைதியான சூழல், வசதியான வசிப்பிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் முக்கியம். தென்னிந்தியாவில் இதற்கு ஏற்ற 10 சிறந்த சுற்றுலா தலங்களை இங்கே பார்ப்போம்.

Top 10 South Indian tourist places for senior citizens

1. ஊட்டி, தமிழ்நாடு

பசுமையான மலைகளும், நிஜமான ஓவியம் போல் தோன்றும் தேயிலைத் தோட்டங்களும் கொண்ட ஊட்டி, மூத்த குடிமக்கள் சுற்றுலாவுக்கு சிறந்த இடம். தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரி, அவலாஞ்சி லேக், தொட்டபெட்டா, பெர்ன்ஹில்ஸ் அரண்மனை, பைக்காரா வாட்டர்பால்ஸ், எமரால்டு லேக், கல்ஹாட்டி வாட்டர்ஃபால்ஸ் ஆகிய இடங்களுக்கு சென்று வரலாம்.

2. மகாபலிபுரம், தமிழ்நாடு

சிற்பக் கலைக் கோவில்களும், கடற்கரையும் கொண்ட மகாபலிபுரம், வரலாற்று புகழ்மிக்க ஒரு தலம். கடற்கரையில் அமைதியாக அமர்ந்து அலைகளை ரசிக்கலாம், அர்ஜுனன் தவம் மற்றும் கடற்கரை கோவிலை பார்வையிடலாம். மூத்த குடிமக்கள் இங்கு அமைதியாக நிம்மதியை அனுபவிக்க முடியும்.

3. குமரகம், கேரளா

கேரளாவின் பிரபலமான Backwaters கொண்ட குமரகம், மூத்த குடிமக்கள் அமைதியாக நேரம் செலவிட சிறந்த இடம். ஹவுஸ்போட் சவாரி செய்யலாம், பறவைகள் சரணாலயத்தை பார்வையிடலாம். ஆயுர்வேத மசாஜ் மூலம் உடல் மற்றும் மன அமைதி பெறலாம்.

4. மைசூரு, கர்நாடகா

மைசூரு அரண்மனை, பிருந்தாவன தோட்டம், சந்தனக் கற்பூரம் வாசம் வீசும் சந்தை - இவையெல்லாம் மைசூரின் சிறப்புகள். சின்ன ஆட்டோவை (Tonga) பயன்படுத்தி நகரத்தை சுற்றலாம். மூத்த குடிமக்களுக்கு மிக எளிமையான நகரமாகவும், அமைதியாகவும் இது காணப்படும்.

5. மதுரை, தமிழ்நாடு

தமிழகத்தின் பண்டைய நகரங்களில் ஒன்றான மதுரை, வரலாற்று மற்றும் ஆன்மீக புகழ்மிக்க இடமாகும். மீனாட்சி அம்மன் கோவில், திருமலைநாயக்கர் மஹால் மற்றும் காந்தி நினைவிடம் ஆகியவை பார்வையிடத்தக்க இடங்கள். மதுரையின் சுவைமிக்க ஜிகர்தண்டாவையும் மறக்காமல் சுவைத்து விட்டு வரலாம்.

Top 10 South Indian tourist places for senior citizens

6. குன்னூர், தமிழ்நாடு

நீலகிரி மலைத்தொடரில் அமைந்த குன்னூர், ஊட்டியை விட அமைதியான சுற்றுலா தலமாகும். மூத்த குடிமக்கள் அமைதியாக இயற்கையின் மடியில் நிம்மதியாக பயணிக்கலாம். சிம்ஸ் பூங்கா, லேம்ப்ஸ் ராக் மற்றும் டால்பின் நோஸ் போன்ற இடங்களில் நேரத்தை செலவிடலாம்.

7. திருவனந்தபுரம், கேரளா

திருவனந்தபுரம் ஆன்மீக மற்றும் கலாச்சார தலமாக விளங்குகிறது. பத்மநாபசாமி கோவில், கோவளம் கடற்கரை ஆகியவை முதியவர்களுக்கு மனநிறைவை தரும் இடங்களாக இருக்கின்றன.

8. கொடைகானல், தமிழ்நாடு

கொடைக்கானல் அதன் குளிர்ந்த வானிலை, பேரிளம் பூங்கா மற்றும் பழனி மலையின் அழகிய தோற்றம் ஆகியவை மூத்த குடிமக்கள் மனதிற்கு அமைதியையும் புத்துணர்ச்சியையும் அளிக்கக்கூடியவை.

9. ஹம்பி, கர்நாடகா

வரலாற்று செழுமை கொண்ட ஹம்பி, புராதனக் கட்டிடக் கலையின் தனிச்சிறப்பைக் கொண்டுள்ளது. மூத்த குடிமக்கள் அழகிய வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிட்டு பழைய கால நினைவுகளை அசை போட்டு மகிழ ஏற்ற இடம்.

10. ஆலப்புழா, கேரளா

"கேரளாவின் வெனிஸ்" என்று அழைக்கப்படும் ஆலப்புழா, ஹவுஸ்போட் பயணத்திற்குப் புகழ்பெற்ற இடம். மூத்த குடிமக்கள் இங்கு நீர்மேல் வீடுகளில் தங்கியிருந்து அமைதியாக நேரத்தை செலவிடலாம்.

Read more about: south india
Read Entire Article