ARTICLE AD BOX
தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.18,999 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
போக்கோ பிரியர்களை தட்டித் தூக்கும்படியான டிஸ்கவுண்ட்டில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட போக்கோ எக்ஸ்7 5ஜி (POCO X7 5G) போன் ஆர்டருக்கு கிடைக்கிறது. வேகன் லெதர் பேனல் டிசைனில் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா சிப்செட்டுடன் விற்பனைக்கு வரும் இந்த போக்கோ எக்ஸ்7 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
போக்கோ எக்ஸ்7 5ஜி அம்சங்கள் (POCO X7 5G Specifications): இந்த போக்கோவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கொண்ட 6.67 இன்ச் (2712× 1220 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, பட்ஜெட்டில் மிட்-பிரீமியம் லெவலுக்கு பீச்சர்களை கொடுக்கிறது. அதேபோல பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா (Octa Core 4nmMediaTek Dimensity 7300 Ultra) சிப்செட் உள்ளது.
இதற்கு ஏற்ப ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு சியோமி ஹைப்பர் ஓஎஸ் (Xiaomi Hyper OS) மற்றும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த போக்கோ எக்ஸ்7 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கிடையாது.
இந்த பட்ஜெட்டைவிட கூடுதல் சென்சாருடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. ஆகவே, சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. இந்த போக்கோ எக்ஸ்7 5ஜி போனில் 20 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்யப்பட்டுள்ளது.
3டி கர்வ்ட் டிஸ்பிளே மற்றும் 8.4 எம்எம் தடிமன் இருந்தும் 5500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பெரிய பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கிடைக்கிறது. விக்டஸ் 2 பாதுகாப்பு மட்டுமல்லாமல், பிரீமியம் மாடல்களுக்கு நிகரான டஸ்ட் மற்றும் வாட்டர்ப்ரூப் கொடுக்கிறது. ஆகவே, இந்த போக்கோவில் IP66 + IP68 மற்றும் IP69 ரெசிஸ்டன்ட் பெற்று கொள்ளலாம்.
இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் மிட்-ரேஞ்ச் மாடல்களில் கிடைக்கும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ சப்போர்ட் மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.21,999ஆ இருந்தது.
இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் வெறும் ரூ.19,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த கம்மி விலையிலும் ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த போக்கோ எக்ஸ்7 5ஜி போனை ரூ.3000 விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். போக்கோ எல்லோ (POCO Yellow), காஸ்மிக் சில்வர் (Cosmic Silver) மற்றும் கிளாசியர் கிரீன் (Glacier Green) கலர்களில் ஆர்டர் செய்யலாம்.