Meta Description:
Meta Keywords:
கேரளா டூர் என்றால் வழக்கமாக செல்லும் சுற்றுலா தலங்களுக்கே சென்று போராடித்து விட்டது என நினைக்கிறீர்களா? புதுசா, பயருக்கும் தெரியாத ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா? வழக்கமாக செல்லும் இடங்களை விட திருவனந்தபுரத்தில் உள்ள பலரும் அறியாத ஏழு முக்கியமான சுற்றுலா தலங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பொன்முடி
திருவனந்தபுரத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமைதியான சுற்றுலாத் தலமான பொன்முடி மூடுபனி நிறைந்த மலைகள், பசுமையான தேயிலை தோட்டங்கள் மற்றும் அழகிய மலையேற்ற பாதைகளுடன் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ளது.
காப்பில் கடற்கரை, காயல்
காயல் கடற்கரை, அரபிக்கடல் சந்திக்கும் ஒரு அமைதியான இடமாகும். இங்கு சூரிய அஸ்தமனம், படகு சவாரி ஆகியவை மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும். பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் இருந்து அமைதியான ஒரு இடத்திற்கு சென்று ஓய்வு எடுப்பதற்கு சிறந்த ஒரு இடமாகும்.
வேலி சுற்றுலா கிராமம்
இந்த சுற்றுலா பகுதி பலராலும் அறியப்படாத ஓர் இடம் ஆகும். இங்கு உள்ள படகு சவாரி, மிதக்கும் பாலங்கள் மற்றும் பசுமையான பூங்காக்கள்,சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அமைந்துள்ளது. இது ஓய்வெடுக்கவும், புகைப்படம் எடுத்து மகிழவும் ஏற்ற இடமாகும். இந்த இடம் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அமைந்துள்ளது.

அருவிக்கரா அணை
இது திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள அழகிய சுற்றுலா தலம். அமைதியான நீர் நிலைகள், பசுமையான சூழ்நிலை மற்றும் அருகில் உள்ள பகவதி அம்மன் கோயில் மிகவும் பிரபலமான ஆகும்.
மீன் முட்டி நீர்வீழ்ச்சிகள்
அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட, அதிகம் அறியப்படாத நீர்வீழ்ச்சியான மீன் முட்டி, நெய்யார் அணைக்கு அருகில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். இங்கு குடும்பத்துடன் பொழுதை கழிக்க மலையேற்றம் மற்றும் பல்வேறு பூங்காக்கள் உள்ளன.
விழிஞ்சம்பாறை வெட்டு குகை கோயில்
சிவன் மற்றும் பார்வதியின் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்களை கொண்ட ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாறை வெட்டுகோயில். இது பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளால் அறியப்படாத ஒன்று. இந்த இடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோயில் ஆகும்.

பெப்பரா வனவிலங்கு சரணாலயம்
பெப்பரா அணைக்கு அருகில் அமைந்துள்ள இந்த வித்தியாசமான வன சரணாலயத்தில் யானைகள் புலிகள் உள்ளிட்ட வனவிங்குகளும் உள்ளன. வெளிநாட்டு பறவைகளின் தாயகமாக இருப்பதால் வனவிலங்கு ஆர்வலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாக உள்ளது.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet